புலிகளின் புதிய போராட்டத்தில் அரசின் இரகசியம் அம்பலம்
கோபி, தெய்வீகன், அப்பன் ஆகியோரை இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தேடப்படும் பட்டியலில் இணைத்து சுவரொட்டிகளை ஒட்டியதில் இருந்து அவர்கள் பதவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும்வரை நிகழ்ந்தவை ஒரு திட்டமிட்ட நாடகம் என ஆரம்பத்தில் செய்திகள் தெரிவித்து வந்தது.
உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல ஊடகங்களும், சில தரப்புகளும் தத்தமது நலன்கள் இருப்புகளின் அடிப்படையில் இந்த விடயத்தை வியாக்கியானப்படுத்திய நிலையில், புலிகளின் மீள் இணைவு என்ற இந்த விடயத்தை இலங்கை அரசாங்க பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகளின் நாடகம் என வலியுறுத்தி வந்தது.
இந்த வகையில் புலிகளின் முன்னாட் போராளிகளான கோபி மற்றும் அவரது சகாக்களான அப்பன், தெய்வீகன் ஆகியோர், வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் முன்னதாகவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பின்னர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. இதனை சடலங்களைப் பார்வையிட்ட பதவிய வைத்தியசாலையோடு நெருக்கமான தரப்பினரும் உறுதிப்படுத்துத்தி உள்ளனர். குறிப்பாக இந்த சடலங்களில் காணப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் அவை மிக நெருக்கமாக இருந்து சுடப்பட்டமைக்கான அடையாளங்களாக இருந்தன என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பில் தொழிற்பட்டவர் கலையன். திருகோணமலையைச் சேர்ந்த இந்தக் கலையன் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு புலிகளால் அனுப்பப்பட்டவர். திருமலை மாவட்டத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராக எழிலன் மற்றும் படைத்துறைப் பொறுப்பாளராக சொர்ணம் கடமையாற்றிய காலப் பகுதியில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்.
அந்த மாவட்டத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக வசந்தன் கடமையாற்றிய நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் கலையன் தொழிற்பட்டதாகவும், சிங்களம் தமிழ் மொழிப் பரீட்சயம் காரணமாக திருமலையில் பணியாற்றியதோடு தென்பகுதி நடவடிக்கைகளோடும் இணைந்து செயற்பட்டுள்ளார். இவ்வாறு புலனாயவு நடவடிக்கைகளோடு இணைந்திருந்த கலையன் தனது குடும்பத்தவர்களையும்; திருகோணமலையிலேயே தங்க வைத்திருந்தார். எனினும் இறுதியுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் தனது குடும்பத்தை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
புலிகளுடன் கடமையாற்றிய காலப்பகுதியிலேயே இராணுவத்திற்கும் தகவல்களை வழங்கும் இரட்டை உளவாளியாக இவர் கடமைணாற்றியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் பின்னர் வலுப்பெற்று இருந்ததாக இவருக்கு நெருக்கமான திருகோணமலையைச் சேந்த முன்னாள் புலனாய்வுப் போராளி ஒருவர் தனது நண்பருக்கு தெரிவித்ததனைக்தார்.
திருமலையில் புலிகளின் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டு வந்த இவர் திருகோணமலை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுள் வீழ்ந்துகொண்டு போனபோது வன்னிக்கு சென்ற எழிலன், சொர்ணம் குழுவினருடன் வன்னிக்கு சென்றவர். அங்கும் தொடர்ந்து புலிகளின் புலனாய்வு அமைப்பில் தொழிற்பட்டாலும் இலங்கை இராணுவத்துக்கும் தகவல்களை வழங்கியதற்கான அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் மே 15க்கு பின்னரான மே 19 வரையிலான காலப்பகுதியில் செய்மதித் தொலைபேசியுடன் இவர் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செயற்பட்டதனை அங்கிருந்தோர் கண்ணுற்றுள்ளனர். எனினும் மே 19ன் பின் இவர் பற்றிய தகவல்கள் தெரியாத போதும் புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாமலேயே சுதந்திரமான நடமாட்டத்துடன் பின்னாளில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். இவரையே புலிகளை மீள இணைக்கும் தொழிப்பாட்டுக்கும், புலிகள் அமைப்பை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளுக்கும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த வகையில் கலையனின் வலையில் முன்னாள் புலியான கோபியே முதலாவதாக வீழ்ந்த நபராக கருதப்படுகிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கி வந்த கோபி என்பவர் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரேபிய நாடு ஒன்றில் தொழில் புரிந்து கடந்த ஜனவரி மாதத்திலேயே நாடு திரும்பியிருந்தார்.
இந்தக் காலப்பகுதியில் தற்செயலாக இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு கடமையாற்றிய கலையன் கோபியை திருகோணமலையில் சந்திக்க நேரிட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் தப்பிய கோபி அரேபிய நாடொன்றில் வேலைக்காக சென்று 3 வருடங்கள் முடிவடைந்த நிலையிலேயே இலங்கை திரும்பி திருகோண மலையில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த வேளை கலையனின் தொடர்பு கிடைக்கப்பெற்றுள்ளது. முன்னாள் போராளி புனர்வாழ்வு அளிக்கப்படாதவர் என்ற வகையில் கோபியைத் தன் வலையில் விழுத்தி புலிகளைத் தமது கட்டுப்பாட்டில் மீள் இணைப்பு செய்யும் விடயத்திற்கு கலையன் பயன்படுத்தி உள்ளார்.
புலிக்குழுவொன்றை மீள உருவாக்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு இருந்தது. இதன் மூலம் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் புலிகளின் செயற்பாடு, பயங்கரவாதம் தொடர்கிறது எனச் சர்வதேச அளவில் நிறுவ அது விரும்பியிருந்தது.
புலிகள் மீள எழுகிறார்கள் அவர்களை கடுப்படுத்தக்கூடிய பலமும் திறமையும் ராஜபக்ஸக்களுக்கே உண்டு என காட்டுவதன் மூலம் தென்னிலங்கையில் அரசியல் செல்வாக்கை தக்க வைக்க முடியும். எனவும் ராசபக்ச குடும்பம் நினைத்திருந்தது. இதற்கு கலையன் என்ற புலிகளின் முன்னாட் புலனாய்வாளர் பயன்படுத்தப்பட்டார். இவரே கோபிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி அரசாங்கத்தின் தேவைக்கு பலியாக்கி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
அடுத்தவர் அப்பன் என்ற நவநீதன். புலிகள் அமைப்பில் இவருக்கு பெயர் திரு. இவர் புலிகளின் கரும்புலிப் போராளியாவர். இறுதியுத்தத்தில் தப்பிய இவர் படையினரிடம் அகப்படாது புனர்வாழ்வுக்கு உட்படாது வாழ்ந்து வந்துள்ளார். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இவர் புலித் தேவனின் நெருங்கிய உறவுக்காரர்.
அடுத்தவர் அப்பன் என்ற நவநீதன். புலிகள் அமைப்பில் இவருக்கு பெயர் திரு. இவர் புலிகளின் கரும்புலிப் போராளியாவர். இறுதியுத்தத்தில் தப்பிய இவர் படையினரிடம் அகப்படாது புனர்வாழ்வுக்கு உட்படாது வாழ்ந்து வந்துள்ளார். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இவர் புலித் தேவனின் நெருங்கிய உறவுக்காரர்.
கிளிநொச்சியிலேயே நடமாடித்திரிந்துள்ளார். இந்த நிலையில் ஏ 9 வீதியூடாகச் சென்ற அப்பனை இலங்கைப் புலனாய்வுப் பிரிவுடனேயே தனது காலத்தை கழிக்கும் கலையன் தற்செயலாக சந்தித்ததில் இருந்து உறவைப் பேணத் தொடங்கியுள்ளார். இதன்போது புலிகளைத் தான் மீளக் கட்டி எழுப்புவதாகவும் பழையவர்களை மீள இணைத்து வருவதாகவும் அதற்கு உதவுமாறு அப்பனுக்கும் உணர்வூட்டி அடுத்த கட்ட ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையூட்டி, இதற்கு புனர்வாழ்வுக்கு உட்படாதவர்களே நம்பிக்கைக்கு உரியவர் எனத் தெரிவித்த கலையன் புலிகளை மீள கட்டி எழுப்புவதற்கான வேலையை ஆரம்பிக்குமாறு கூறியுள்ளார்.
புலிகளின் புலனாய்வுத்துறைப் போராளியாக இருப்பது, புனர்வாழ்வுக்கு உட்படாது தொடர்ந்து தொழிற்படுவது, திருகோணமலையிலேயே தங்கியிருந்து வேலைசெய்வது என்ற அடிப்படையில் கலையனின் புலிக்கதையை அப்பனும் இலகுவில் நம்பியுள்ளார். அதன் அடிப்படையில் கோபியுடன் அப்பனும் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகளை கலையனின் ஊடாக பாதுகாப்பு தரப்பு நகர்த்திய வேளையில் சமாந்தரமாக புலிகளின் விமானப் படைப் போராளியாக இருந்த தெய்வீகனும் புலனாய்வாளர்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இவர் இறுதி யுத்தத்தில் தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார் எனக் கூறப்பட்ட போதும் அவரும் படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருடன் புணர்வாழ்வில் இருந்த மூத்த போராளி ஒருவர் தெய்வீகன் தன்னுடனேயே புனரவாழ்வுக்கு உட்பட்டு இருந்தார் என்பதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
தெய்வீகன் அனுராதபுர விமானப் படைத் தளத் தாக்குதலில் பங்கு கொண்ட முக்கியமானவர் என்பதோடு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ளார். இந்த தகவல்கள் யாவும் தெரிந்த நிலையிலேயே பாதுகாப்பு தரப்பின் பொறிக்குள் தெய்வீகன் சிக்கியிருந்துள்ளார். அந்த வகையில் புதுக்குடியிருப்பை அண்மித்த பிரதேசத்தில் புலிகளின் புதிய விமானப் பாகங்கள் பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு இருந்தது. அதனைத் தெய்வீகனே காட்டிக் கொடுத்ததாக அந்த மூத்த போராளி கூறுகிறார்.
தெய்வீகன் அனுராதபுர விமானப் படைத் தளத் தாக்குதலில் பங்கு கொண்ட முக்கியமானவர் என்பதோடு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ளார். இந்த தகவல்கள் யாவும் தெரிந்த நிலையிலேயே பாதுகாப்பு தரப்பின் பொறிக்குள் தெய்வீகன் சிக்கியிருந்துள்ளார். அந்த வகையில் புதுக்குடியிருப்பை அண்மித்த பிரதேசத்தில் புலிகளின் புதிய விமானப் பாகங்கள் பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு இருந்தது. அதனைத் தெய்வீகனே காட்டிக் கொடுத்ததாக அந்த மூத்த போராளி கூறுகிறார்.
மேலும் புலிகளின் விமானப்படையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து பெருமளவு தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெய்வீகனூடாகப் பெற்றுக் கொண்டதோடு முக்கியமான விமான பாகங்களையும் கைப்பற்றி இருந்தது. அதற்கான பிரதி உபகாரமாக தெய்வீகன் சுதந்திரமாக விடப்பட்டதாக தெய்வீகனுடன் இருந்த அந்த மூத்த போராளி தெரிவித்தார்.
இருந்த போதிலும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் அவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே தெய்வீகன் இயங்கவிடப்பட்டு இருந்தார் ஆத்துடன் இவர் தனது குடும்பத்தினருடனேயே வவுனியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார் என சில தகவல்கள் கூறுகின்ற போதும் அவை தெளிவற்ற தகவலாகவே உள்ளன .
http://www.jvpnews.com/srilanka/66119.html
CIDயினரால் கிளிநொச்சி மூதாட்டி கைது
கிளிநொச்சியில் 64 வயதுடைய மூதாட்டியொருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரhல் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டமைக்கான தகவல்கள் எதுவும்
வெளிவர வில்லை.
வெளிவர வில்லை.
http://www.jvpnews.com/srilanka/66113.html
Geen opmerkingen:
Een reactie posten