ஊடக அடக்கு முறையில் நான்காம் இடத்தில் இலங்கை
ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் வொஷ்டோக் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையிலேயே இலங்கைக்கு நான்காம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஈராக்கிலேயே அதிகளவிலாள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதால் இந்த பட்டியலில் ஈராக் முதலிடத்தை வகிக்கின்றனது.
இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஈராக், சோமாலியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ, கொலம்பியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரேசில், நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகள் 13 இடங்களைப் பிடித்துள்ளன.
http://www.jvpnews.com/srilanka/65841.html
இராணுவ உறவு வேண்டுமானால் அமெரிக்கா இலங்கைக்கு நிபந்தனை
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா, நிபந்தனை விதித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மத்திய மற்றும் தென் ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிஷ்டவசமாக இலங்கையில் சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் நம்பகமான ஓர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65859.html
கிளிநொச்சி பெண்ணின் கொலையில் அகப்பட்ட இராணுவச் சிப்பாய்…
மாத்தளையைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர் கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சலடாக கடந்த 13ஆம் திகதி மீட்கப்பட்டார். சடலத்தின் கழுத்தில் வெட்டுக்காயம் காணப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள முகாம் ஒன்றிலிருந்து சிவில் பாதுகாப்பு சிப்பாய் ஒருவர் நேற்று (16.04.14) காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த பெண்ணை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் குறித்த சிப்பாயிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு சிப்பாயுடன் ஏற்பட்ட காதல் தொடர்பு காரணமாக கர்ப்பம் அடைந்த பெண் தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டு கிளிநொச்சி வந்தார்.
திருமணம் செய்ய மறுத்த சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் குறித்த பெண்ணை கொலை செய்து கிணற்றிற்குள் வீசியுள்ளார். சந்ததேக நபர் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/65864.html
Geen opmerkingen:
Een reactie posten