தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

அம்பலத்துக்கு வரும் உண்மை; நேற்றைய யாழ் இளம் பெண்ணின் (தற்)கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்??


நேற்று(14) குருநகரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையில் இரு பாதிரியார்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொதுமக்கள் எமது அதிரடி இணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அடப்பன் வீதி, குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோன் ஜெயரோமி கொன்சலிட்டா என்ற இளம் பெண் நேற்று முன்தினம் (13) அன்று காணாமல் போன நிலையில் நேற்றைய தினம் குறித்த பெண்ணின் வீட்டருகில் உள்ள கிணற்றில் இருந்து கொன்சலிட்டாவின் சடலம் மீட்கப்பட்டது.

இப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் பலரும் கருதிய போதும் அதன் பின் இடம்பெற்ற விசாரணைகளில் இப் பெண்ணின் மரணம் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் தாயான ஜெரோன் மேரி புஸ்பராணி என்பவர் அதிரடி இணையத்திற்கு தெரிவிக்கையில், "எனது மகள் படித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் அருகில் இருந்த பெரிய கோவில் சபையினுடைய இரு பாதிரிமார் எனது மகளை மறைக் கல்வி போதிக்க அனுப்புமாறு கோரினர். வீட்டில் சும்மதா தானே இருக்கிறாள் போய் மறைக் கல்வி கற்பிப்பது நல்லம் தானே என நானும் ஒம் என்று விட்டுட்டேன். ஆனால் மறைக்கல்வி போதிக்கச் சென்ற எனது மகளை அங்கிருந்த பிரதான பாதிரியாரின் உதவியாளர்களான திருச்செல்வம் குயின்றன் பெர்னாண்டோ, மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.

அங்கிருந்து வந்ததும் எனது மகள் ஒரே சோகமாய் அமர்ந்திருப்பாள். அவளது தொலைபேசிக்கு ஒரே அழைப்பு வரும். அதை அவள் கட் பண்ணுவாள். இந் நிலையில் அவளிடம் நடந்தவற்றை விசாரித்தேன். அப்போது தான் அவள் கூறிய கருத்துக்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த உதவிப் பாதிரியார் ஆன திருச்செல்வம் குயின்றன் பெர்னாண்டோ என்பவர் தன்னை காதலிக்குமாறு எனது மகளை கேட்டுள்ளார். அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்க எங்க போனாலும் என்னை மறக்க கூடாது என்னுடன் தொடர்பில இருக்கணும் எனக் கூறியதுடன் மேலே உள்ள தனது றூமுக்கும் வருமாறு உதவிப் பாதிரியார் நிக்சன் வற்புறுத்தியுள்ளார். "இதனை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால் உன்னைப்பற்றி கூடாமல் சொல்லுவன்" என மிரட்டியுள்ளார்.

அதன் பின் எனது பிள்ளை வெளியில் போறதே குறைவு. ஒரே பயந்து போய் இருபபாள். அவளுடைய தொலைபேசிக்கு பலதடவைகள் கோல் வந்துள்ளது. அதன் பின் தான் அவள் சென்றுள்ளாள். ஆகவே எனது மகள் இறப்பதற்கு இந்த நாசம் கெட்ட உதவிப் பாதிரியாரே காரணம்" என அழுது புலம்பினார்.

மரணமடைந்த கொண்சலிட்டா என்ற இளம்பெண்ணின் மரணசடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாக பெண்ணின் தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து இக்கொலையின் மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளது.

பரம இரகசியமாக சம்பவத்தினை குடும்ப நலனினை கருத்தில் கொண்டு மறைக்கப்பட்ட இச்சம்பவத்தில் வெளிப்படையாக இரு மறைமாவட்ட உதவிப் பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். உடனடியாக ஊர் பொதுமக்கள் திரண்டு பெண்ணின் கொலை தொடர்பில் நீதி கோரி மறைமாவட்ட ஆயர் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து சில பாதிரிமார்கள் மரண வீட்டிற்கு வந்து ஆறுதல்படுத்தும் முயற்சியிலும், சம்பவத்தை இருட்டடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. மரணமடைந்த பெண் மிகவும் அமைதியான, பண்புள்ள, மறைகல்வி போதித்து வந்த ஆசிரியை என பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க, குறித்த உதவிப் பாதிரியார் உயிரிழந்த பெண்ணின் கைத்தொலைபேசிக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அக் குறுந்தகவல்களின் மூலம் உதவிப் பாதிரியாரின் முகத்திரை கிழிந்துள்ளது. மறைக்கல்வியையும் சமயத்தையும் போதிக்க வேண்டிய பாதிரியார் காமத்தையும் காமலீலைகளையும் போதிக்க முயன்றமையும் மதத்தின் பெயரால் பாலியல் இம்சை செய்தமையும' தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்ணின் உடன் பிறவா சகோதரரான கியூட்சன் சகாயநாதன் என்பவர் லண்டனில் இருந்து கருத்துத் தெரிவிக்கையில், "மதம் என்ற பெயரில் காமலீலைகளிலும், துஸ்பிரயோகங்களிலும் ஈடுபடும் பாதிரிமார் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் போன்று ஒரு சிலரால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் தலைகுனிவாகும் முன்னைய காலங்களில் புலிகள் இருந்ததால் பயத்தில இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை. ஏனெனில் அவர்கள் உடனுக்குடன் தண்டனை வழங்குவார்கள்.. ஆனால் தற்போது தட்டிக்கேட்க யாரும் இல்ல என்ற துணிவிலே இவ்வாறு செய்கிறார்கள்" என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

எனவே, இவ்வாறான பாதிரிமார் தொடர்ந்தும் தேவையா? என்பதை அந்த மதம் சார்ந்த எமது சமூகம் முடிவெடுக்க வேண்டும். இது போன்று வேறு பெண்களுக்கு நடக்காது என்று என்ன உத்தரவாதம்? இது போன்ற மதகுருமார்கள் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் கடவுள் நம்பிக்கையே கேள்விக்குறி ஆகிறது அல்லவா?? மக்களே முடிவெடுங்கள்.. மதத்தின் பெயரால் காமலீலை செய்யும் கயவர்களை எமது பிரதேசத்தில் இருந்து விரட்டுவோம். கொலை செய்தவனை விட தூண்டியவனே குற்றவாளியாகின்றான்.

இந்த பெண் தற்கொலையா? கொலையா என்பது ஒருபுறமிருக்க இவ் மரணத்திற்கு முற்று முழுதாக குறித்த உதவிப் பாதிரியாரே காரணம் என முழுமையான ஆதராங்களும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு எமது சமூகத்திற்கு முன்மாதிரியாக பொலிஸார் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்பாகும்.

--அதிரடி இணையத்தளத்திற்காக யாழில் இருந்து பா.டிலான், வன்னியில் இருந்து எல்லாளன்--

(பல வீடியோக்கள் மற்றும் பல புகைப்படங்களை தரவேற்றுவதினால் எமக்கு சில மணி -நீண்ட- நேரம் எடுத்து விட்டது.. குறைநினையாது இச்செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி! --"அதிரடி" நிர்வாகம்--)

முழுமையான வீடியோக்களையும் படங்களையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்திப் பார்க்கவும்..
(அதிர்ச்சி வீடியோக்கள் & படங்கள்) அம்பலத்துக்கு வரும் உண்மை!; நேற்றைய யாழ் இளம் பெண்ணின், (தற்)கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?? - See more at: http://www.athirady.com/tamil-news/infomation/359995.html#sthash.83pH1eCS.dpuf
 —http://4tamil.com/?p=22376

Geen opmerkingen:

Een reactie posten