தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 april 2014

புலிகள் அச்சம் தொடர்கிறதா ? திருமலையில் நேற்று பாரிய கடற்படை ஒத்திகை !

விடுதலைப் புலிகளின் அச்சம் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரிடையே தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. இலங்கையில் தற்போது போர் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் போர் ஒன்று ஆரம்பித்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்று, அரச படைகள் பல ஒத்திகைகளை பார்த்து வருகிறார்கள். கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தினர் சில போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் கடற்படையினரே பாரிய அளவில் மற்றும் பலமுறை போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

திருகோணமலை கடற்பரப்பில் நேற்று முன் தினம்(வெள்ளிக்கிழமை) பாரிய போர் ஒத்திகை நடைபெற்று அது நேற்றைய தினம்(சனிக்கிழமை) முடிவுற்றுள்ளது. பிறநாட்டு படைகள் இலங்கைக்குள் ஊடுருவ நினைத்தால் அதனை எவ்வாறு கடலில் இடைமறித்து தடுப்பது என்பது தொடர்பாகவே, இந்த ஒத்திகை நடைபெற்றதாக வைஸ் அட்மிரல் ஜயந்த ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அத்தோடு "ரி- நெக்ஸ்" என்று இரகசிய குறியீட்டில் அழைக்கப்படும், இந்த ஒத்திகை நடவடிக்கை சனிக்கிழமையோடு முடிவுற்றதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.







|
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6636

Geen opmerkingen:

Een reactie posten