தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 april 2014

காஸ்ரோவின் இரகசிய பைஃல் ஒன்று இராணுவத்திடம் சிக்கியதா ?

விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளுக்கு பொறுப்பாக இருந்த காஸ்ரோ அவர்களின், இரகசிய பைஃல் ஒன்று இராணுவத்திடம் சிக்கியுள்ளதாக கொழும்பில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் முன் நாள் போராளி ஒருவரை இலங்கை இராணுவம் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது. இச்செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. இவரை பல சித்திரவதைக்கு உள்ளாக்கிய இலங்கை இராணுவம் அவரூடாக சில தகவல்களைப் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. கிளிநொச்சியில் உள்ள ஒரு வீட்டின் காணியில் புதைக்கப்பட்டு இருந்த சில ஆவணத்தை கடந்த மாதம் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தோண்டி எடுத்துச் சென்றுள்ளார்கள். 

பாலித்தீன் பைகளின் அடைக்கப்பட்டு இவை புதைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. குறித்த அந்த ஆவனத்தில் இருந்தே பலரது பெயர்களை இலங்கை புலனாய்வுத் துறை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சுமார் 400 தமிழர்களது பெயர் பட்டியலை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது என்ற செய்தியை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்திருப்பீர்கள். அப்பெயர்கள் இதனூடாகவே பெறப்பட்டுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குச் சென்று, சிலர் பயிற்ச்சிப் பட்டறைகளில் ஈடுபட்டு இருந்தார்கள் என்றும், அவர்களது பெயர்களே தற்போது சிக்கியுள்ளதாகவும் , ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கிறது.

இருப்பினும் இலங்கை அரசு, இந்த ஆவணத்தில் உள்ள பெயர்களை தவிர, தமக்கு வேண்டாத புலம்பெயர் தமிழர்களின் பெயர்களையும் இணைந்துள்ளார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten