இலங்கை அரசியல்வாதிகளுக்கும் பயணத்தடை ஏற்படுத்தத் தயாராகும் புலம்பெயர் அமைப்புக்கள்
இலங்கை அரசியல்வாதிகளுக்கு பயணத் தடையை விதிக்க புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்யும் வகையிலான உத்தரவுகளை பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சித்து வருவதகாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுக்கு எதிராக பயணத்தடை, சொத்து முடக்கம் போன்றவற்றை விதிப்பதே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் இலக்காக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வாழ் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிப்பதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தை இலக்கு வைத்து புலி ஆதரவு அமைப்புக்கள் போராட்டங்களை நடாத்த உள்ளதாக, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பீ.எம். ஹம்சா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராஜதந்திர மட்டத்தில் திடீர் மாற்றம்
இலங்கைய ராஜதந்திர சேவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிக முக்கியமான நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர், தூதுவர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிரசாத் காரியவசம் அமெரிக்க தூதுவராகவும், கருணாதிலக்க அமுனுகம ஜெர்மனி தூதுவராகவும், சுதர்சன செனவிரட்ன இந்தியாவிற்கான தூதுவராகவும், சரத் கொஹங்காகே தென் கொரிய தூதுவராகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/64613.html
வெளிநாட்டவர் சொத்துகளை முடக்கத் தயாராகும் இலங்கை
புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை முடக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டமாக அமைப்புக்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் தடை விதித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வரும் எவருக்கும் இலங்கை அரசாங்கம் வீசா வழங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள், அல் கய்தா, தலிபான் போன்ற இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணிய தனிப்பட்ட நபர்களும் அமைப்புக்களுமே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten