ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தன.
2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைக் குழுவில் மூன்று நிபுணர்கள் அங்கம் வகிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பெரும்பாலும் எதிர்வரும் மே மா நடுப்பகுதியளவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது.
27ம் அமர்வுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 28ம் அமர்வுகளில் இலங்கை தொடாபிலான விசாரணை அறிக்கை எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த விசாரணைகளை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/64607.html
Geen opmerkingen:
Een reactie posten