தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

வடமராட்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

அமைச்சர் றிசாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஜாதிக ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 11:43.38 PM GMT ]
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்தமைக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களை வடக்கில் சட்ட ரீதியாக குடியேற்ற வேண்டும் என்பதே ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடாக இருக்கிறது.
ஆனால் சட்ட ரீதியாக அல்லாமல் முஸ்லிம்களை கொண்டு எங்கும் குடியேற்றம் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத்திற்கு தெரியாமல் செயற்பட்டுள்ள அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlv5.html

ஊடகவியலாளரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்குதல்! வடமராட்சியில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 11:57.25 PM GMT ]
யாழ். சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் இன்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் வடமராட்சியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி, மாலுசந்தி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சிவஞானம் செல்வதீபன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானர்.
குறித்த ஊடகவியலாளர் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருக்கையில், அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த ஊடவியலாளர் சிகிச்சைக்காக பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
வடமராட்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் 
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினக்குரல் மற்றும் 'வீரகேசரி' பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் இன்றிரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்று கொண்டிருந்த போது புறாப்பொறுக்கி சந்தியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அருகிலே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரோடு உரையாடலை ஏற்படுத்தி அவர்தான் செல்வதீபன் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளாகி வீதியில் விழுந்த பின் அவர் எழுந்து அருகிலிருந்த பற்றைக்குள் ஓட முயன்ற பொழுது மீண்டும் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார்.
அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கடைசி பஸ் வண்டியின் சாரதி வீதியோரத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்திருப்பதைக் கண்டு பஸ்ஸை நிறுத்திய போது தாக்கியவர்கள் தப்பியோடியுள்ளனர்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்ய முயன்றுள்ளனர்.
எனினும், காயமடைந்தவரை உடனயாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனப் பொதுமக்கள் கூறி அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அவர் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களைப் பதிவு செய்த பொழுது, காணாமல் போன தனது சகோதரர் தொடர்பாக இவரும் அங்கும் சாட்சியம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களாகவே சந்தேகத்திற்குரிய நபர்களால் தான் பின்தொடரப்படுவதாக தனது பத்திரிகை அலுவலகங்களில் அவர் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு, நெல்லியடி பொலிஸ் நிலையத்திலிருக்கும் தனக்குத் தெரிந்த பொலிஸார் சிலரிடம் இது தொடர்பாக அவர் கூறியிருந்திருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlv6.html

Geen opmerkingen:

Een reactie posten