விகாரைகள் மற்றும் பௌத்த தேவாலயங்களுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கம் சுவீகரிக்காது என காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளத் தயார். பிம்சவிய திட்டத்தின் கீழ் விகாரைகளுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது.
காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது.
எனவே, காணி சுவீகரிப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிம்சவிய திட்டத்தின் காணிக் சுவீகரிக்கப்பட உள்ளதாகவும், இதனால் விகாரைக் காணிகள் சுவீகரிக்கப்படலாம் எனவும் மல்வத்து அஸ்கிரிய பீடாதிபதிகள் உள்ளிட்ட மகாநாயக்க தேரர்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.
இதுதொடர்பில் விளக்கமளித்த போது காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjq7.html
Geen opmerkingen:
Een reactie posten