[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 02:25.43 AM GMT ]
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல விமான நிலையம் மற்றும் மஹிந்த ராஜபக்ச துறைமுகம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்று அங்கு சென்றிருந்தது.
இதன்போது மத்தல விமான தளத்தில் வைத்து குறித்த குழுவினர் அச்சுறுத்தப்பட்டனர். இதனையடுத்து துறைமுகத்துக்கு சென்றவேளையில் அங்கு அவர்கள் மீது அழுகிய முட்டைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வாரன ஆளும் கட்சியின் இராஜ் பெர்ணான்டோ கைத்துப்பாக்கியுடன் இருந்ததாக ஐக்கிய தேசியக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பத்திரிகைகளிலும் அவர் கைத்துப்பாக்கியுடன் ஓடி வரும் காட்சி பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனினும் தாம் ஒருபோதும் துப்பாக்கியை கொண்டு செல்லவில்லை என்று இராஜ் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்த அங்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே தம்மை கேட்டுக்கொண்டதாக இராஜ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjq0.html
நடு ரோட்டில் துப்பாக்கிகளோடு அலையும் சிங்களவர்கள் !
18 April, 2014 by admin
மகிந்த ராஜபக்ஷவின் கோட்டை என்று பலராலும் வர்ணிக்கப்பட்டும் இடம் ஹம்பாந்தோட்டை ஆகும். மகிந்தர் பிறந்த இடமும் அதுதான். நேற்றைய தினம் அங்கு சென்ற, ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி ஒருவரை மகிந்தரின் கும்பல் ஒன்று திரத்தி திரத்தி அடித்துள்ளார்கள். பொலிசார் எதனையும் செய்யாது வெறுமனவே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். இன் நிலையில் துப்பாக்கியோடு ஒருவர் அங்கே வந்து நடு ரோட்டில், கலாட்ட வேறுசெய்து பெரும் அமளி துமளியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி ஒருவர் ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகத்தை பார்வையிட்டு விட்டு பின்னர் அங்குள்ள விமானநிலையத்தையும் பார்வையிடச் சென்றுள்ளார். அவர் அங்கிருந்து வெளியேவந்த வேளை சொல்லிவைத்தால்போல, சிலர் கூடி நின்று செருப்புகளை முதலில் எறிந்துள்ளார்கள். பின்னர் ஆவேசமாக முட்டை தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். முட்டை என்றால் சும்மா முட்டை இல்லை. கூழ் முட்டையை குறிவைத்து அடித்துள்ளார்கள். படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாம் ஒரு புறம் நடக்க, முழுக்க முழுக்க கூழ் முட்டையால் அடி வாங்கி நனைந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி நின்றிருக்க போதாக்குறைக்கு நமால் ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மேயர் ரவீந்திர பெஃர்னாண்டோவை தொடர்புகொண்டு ஏதோ கூறியுள்ளார். இதனையடுத்தே அவர் தனது கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு, ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியை துரத்தியுள்ளார் என்று தற்போது அதிர்வு இணையம் அறிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மிகவும் பொறுமையோடு பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பின்னர் குறித்த அந்த எம்.பியை காரில் ஏற்றி அனுப்பிவைத்தார்கள்.
இத்தாக்குதலை நடத்திய கும்பல் நமால் ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும், இவர்களே அப்பகுதியில் நாட்டாண்மை செய்து வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது. மகிந்தரின் மகனின் இந்த கூலிப்படையின் செயலை, ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. ஆனால் எவரையும் பொலிசார் இதுவரை கைதுசெய்யவே இல்லை.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6694
பொய் கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்: கே.பியின் பெயர் தொடர்ந்தும் இன்டர்போல் இணையத்தளத்தில்!
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 08:30.11 AM GMT ]
இன்டர்போல் சிகப்பு பிடிவிராந்து பட்டியலில் கே.பியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் கூறியிருந்தார். எனினும் இன்டர்போல் பொலிஸ் இணையத்தளத்தில் அவரது பெயர் தொடர்ந்தும் காணப்படுகிறது.
பத்மநாதன் புலிகளின் உயர் மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்ததுடன், அந்த அமைப்பின் சர்வதேச வலைமைப்புக்கு பொறுப்பாகவும் ஆயுத விநியோகஸ்தராகவும் பண சலவை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததார்.
குமரன் பத்மநாதன் மலேசியாவை தளமாக கொண்டு கப்பல் நிறுவனம் ஒன்றை 1987 ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்ததுடன் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக மலேசிய விசேட கண்டறிந்ததை அடுத்து அவர் அந்த நாட்டில் இருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டதுடன் கப்பல் ஒன்றையும் மலேசியா கைப்பற்றியது.
இதனையடுத்து கே.பி தாய்லாந்துக்கு தனது நகர்வுகளை மாற்றிக்கொண்டது. அந்நாடு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியது.
கே.பி. விடுதலைப் புலிகளின் வங்கி, கொள்வனவு மற்றும் கப்பல் பிரிவுக்கு தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அவர் தாய்லாந்து குடியுரிமையை கொண்டுள்ளதாக நம்படுகிறது.
கே.பி. ஜோன்னஸ்பேர்க், ரங்கூன், சிங்கப்பூர் மற்றும் பேங்கொக் நகரங்களில் பொலிஸாரினால் தேடப்படும் நபராக இருந்து வந்தார்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரித்தானியாவின் எம்.ஐ.-5 உட்பட உலகின் முன்னணி புலனாய்வு முகவர் அமைப்புகள் அவருக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வந்தன.
லண்டன், பிராங்பேர்ட் , டென்மார், ஏதென்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் அவருக்கு வங்கி கணக்குகள் இருந்தாகவும் 200க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து பல விடுதலைப் புலிகள் தப்பிச் செல்ல உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளுடன் இணைந்து கே.பி பணியாற்றியதாக 2011 ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நேரடியான தனிப்பட்ட ரகசியமான தொடர்புகளை கே.பி கொண்டிருந்தாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென கைது செய்யப்பட்ட கே.பி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதுடன் தற்போது அவர் வடக்கில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjr6.html
Geen opmerkingen:
Een reactie posten