[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 03:36.29 AM GMT ]
கடந்த 31ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் சிறுமி விபூசிகா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயாரைச் சென்று பார்ப்பதற்கும் வீட்டிற்குச் சென்று அவரது உடமைகளை எடுத்து வருவதற்கும் சிறுமிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இதனையடுத்தே நீதிவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். அதன்படி சிறுவர் நன்னடத்தை அதிகாரி, மகாதேவா சிறுவர் இல்ல தலைவர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் தாயாரைப் பார்ப்பதற்கு தேவையான ஆவணங்களையும் தமது பகுதி கிராம சேவையாளரிடம் இருந்து விபூசிகா பெற்றுக்கொண்டுள்ளார்.
இராணுவத்தினராலும் பொலிஸாராலும் தேடப்பட்டுவரும் கோபி என்கின்ற சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த மாதம் 13ஆம் திகதி ஜெயக்குமாரியும் விபூசிகாவும் தர்மபுரத்தில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWew5.html
இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்! மண்டைதீவில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 02:34.51 AM GMT ]
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டதனை அடுத்தே அவர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், அரியாலை, செம்மணி, வண்ணார்பண்ணை மற்றும் நீர்வேலி ஆகிய இடங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றித் தெரியவருவதாவது,
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தில் சமுர்த்தி அலுவலகத்தின் அருகிலுள்ள வீட்டிலிருந்த இளம் பெண்ணை, வானில் வந்த ஐவர் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை, வீட்டினர் கத்தியுள்ளனர். இதன்போது சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் ஓடிச் சென்ற போதும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது கடத்தலில் ஈடுபட்ட முயற்சித்த இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர் உடனடியாக கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்த, கிராம சேவையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
பொலிஸார் மண்டைதீவு சந்தியிலுள்ள பொலிஸாருக்கு இது பற்றித் தெரிவித்ததைத் தொடர்ந்து, குறித்த வாகனம் மண்டைதீவுச் சந்தியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இந்த வாகனத்தில் இருந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த இளைஞர்களில் ஒருவரைத் தான் காதலிப்பதாகவும், அதற்கு வீட்டுக்காரரின் சம்மதம் கிடைக்காததாலேயே இவ்வாறு அவர்களுடன் சென்றதாகவும் மேற்படி பெண் தெரிவித்தார்.
ஆனால், இவர்களின் வாகனத்தின் சீற்றுகளுக்கு அடியில் 2 வாள்கள், 2 இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணைத் தந்தையிடம் ஒப்படைத்ததுடன், இளைஞர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWew3.html
Geen opmerkingen:
Een reactie posten