| பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவ தம்பதிகள் நபிகள் நாயகத்தை அவமதித்துஎஸ்.எம்.எஸ்அனுப்பியதாககுற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கோஜ்ரா என்ற நகரில் வசித்து வரும் இமானுவே-ஷகுப்டா கவுசர் என்ற தம்பதியினர் மீது அதே நகரில் உள்ள மசூதி ஒன்றின் தலைவர மௌல்வி முகமது ஹூசை என்பவர் கடந்த யூலை மாதம் 21ம்திகதி பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் இந்த தம்பதியினர் தங்களது கைபேசியில் இருந்து நபிகள் நாயகத்தை அவமதிக்கும்படியான ஒரு எஸ்.எம்.எஸ் ஜதனத கைபேசிக்கு அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.ஆனால் இதை தம்பதிகள் இருவரும் மறுத்து விட்டனர். தங்களது கைபேசிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொலைந்துவிட்டதாகவும்,தங்களுக்கு வேண்டாத சிலர்,தங்களது கைபேசி மூலம் தவறான எஸ்.எம்.எஸ்களை அனுப்பி தங்களை சிக்கலில் மாட்டிவிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் நீதிமன்றில் நேற்று அளித்த தீர்ப்பில் இருவருக்கும் மரணதண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.இந்த தீர்ப்பை அளித்த பாகிஸ்தான் நீதிபதி மியான் அமீர் ஹபீப் நபிகள் நாயகத்தை அவமதிப்பவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்;லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தம்பதியினர் மேல் முறையீடு செய்யவிருப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
| 08 Apr 2014http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1396957451&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 8 april 2014
எஸ்.எம்.எஸ் அனுப்பியதால் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் (படம் இணைப்பு)
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten