[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 06:59.45 AM GMT ]
தேசிய ஐக்கியத்திற்கான மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
மூவின மக்களின் உரிமைகளையும் வென்றெடுக்கும் வகையிலான அரசியல் தீர்வொன்றினை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
முப்பது வருட கால யுத்தத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போய்விட்டது. சிங்கள மக்களின் ஆதரவின்றி தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பது கடினமென யுத்த முடிவில் தெரிந்து விட்டது.
மூவின மக்களையும் ஒன்றிணைத்து நாட்டில் ஐக்கியத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின், அதிகாரப் பகிர்வு முறைமையினை கையாள வேண்டும். தேசிய ஒற்றுமையினையும், மக்களின் ஐக்கியப்பாட்டினையும் உருவாக்க வேண்டியதொரு கால கட்டத்திலேயே நாம் இருக்கின்றோம்.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, சம உரிமைகளுடைய ஓர் சமூக கட்டமைப்பு மற்றும் ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்ற வகையிலானதொரு அரசியல் கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேற்கத்தேய காலனித்துவ காலகட்டத்தில் இலங்கையில் ஜனநாயகம் காணப்படவில்லை. மேற்கத்தேய வாதிகளின் அடிமைகளாகவே நாம் வாழ்ந்து வந்தோம். எனினும் இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எனினும் பூரணமானதொரு சுதந்திரத்தினையும், ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் இன்று எந்த மொழியில் ஆட்சி நடத்துவது என்ற சிக்கல் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலமான ஆட்சியொன்று வேண்டுமென்றொரு குரல் எழ ஆரம்பித்துள்ளது. இது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரியதொரு சவாலாகும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கில் தமிழ் மக்கள் தமக்கானதொரு அதிகார பலம் வேண்டுமென குறிப்பிட்டு வருகின்றனர்.
உண்மையிலேயே அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படுவதினூடாகவே நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என்பதே எனது கருத்து. இவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின் அநாவசியமாக சர்வதேச நாடுகள் எமது விடயங்களில் தலையிட தேவை ஏற்படாது.
மேலும் தனித் தமிழீழமொன்றினை உருவாக்க வேண்டுமென்று விடுதலைப் புலி இயக்கம் முப்பது வருட காலம் போராடியும் அது பயனின்றி போய்விட்டது.
யுத்தத்தினால் தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போயுள்ளது. இதனால் நாட்டையும் ஐக்கியப்படுத்த முடியாது போய்விட்டது.
சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தமிழ் மொழியினையும் தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்கள மொழியினையும் பரப்பி மொழி ஒற்றுமையினை ஏற்படுத்த வேண்டும்.
புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய நந்தகோபனிடம் தொடர்ந்து விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 08:27.12 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவரும், உறுப்பினருமான நந்தகோபன், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு முயற்சித்த போது, மலேஷியாவில் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தற்போது, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலின் கீழ், சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் நந்தகோபன் பல நாடுகளில் வாழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், யுத்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் தங்கியிருந்த காலப் பகுதியில் இலங்கையில் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWex4.html
அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு சிங்கள அமைப்புக்கள் மனுத் தாக்கல்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 09:10.58 AM GMT ]
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம், தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அவர்களை இலங்கைக்கு அழைத்து, அவரை தூக்கிலிட வேண்டும் என்று, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சிங்கள பேரினவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.
இதன் மூலம் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான சர்வதேசத்தின் பார்வையை திசை திருப்ப முடியும் என்று அந்த அமைப்புகள் ஆலோசனை வழங்கியிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWex6.html
Geen opmerkingen:
Een reactie posten