தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- முரளிதரன்
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 11:32.08 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.
எனவே புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கிளிநொச்சியில் வைத்து அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், கூட்டமைப்பு உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை வழங்குவார் என கருணா தெரவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சோனியா காந்தி புலிகளை பழி வாங்குவதில் தீவிரம் காட்டினார்!
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 11:36.55 PM GMT ]
தமது கணவரான முன்னாள் இந்திய பிரதமா ராஜீவ் காந்தியை படுகொலை செய்த புலிகளை பழி தீர்த்துக் கொள்ள சோனியா விரும்பினார்.
இந்திய ஊடகவியலாளர் சாம் ராஜப்பா என்ற ஊடகவியலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவி;க்கப்படுகிறது.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகர்வதற்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென சோனியா விரும்பினார் என குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மீது சோனியா கடும் விரோதம் பாராட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவர சில வெளிநாட்டு சக்திகள் முயற்சித்த போதிலும்ää இந்தியா அதற்கு இடமளிக்கவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETXLWgx4.html
Geen opmerkingen:
Een reactie posten