[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:36.39 PM GMT ]
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் குறித்த அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது.
எனவே குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த எவரையும் நவனீதம்பிள்ளையினால் விசாரணைகளில் இணைத்துக்கொள்ள முடியாது.
புலி ஆதரவு அமைப்புக்களைச் சேர்ந்த 44 பேர் இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இந்த சாட்சியாளர்களில் எவரும் போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் சாட்சியமளிப்போர் தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXko7.html
பிரித்தானிய நா. உறுப்பினர்களின் இலங்கை விஜயத்தை குழப்பியது சனல் 4 ஊடகமே!- சிங்கள ஊடகம்
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:43.19 PM GMT ]
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த விஜயம் ரத்து செய்யப்பட்டது.
பிரித்தானியாவின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சனல்4 ஊடகமும் கூட்டாக இணைந்து இந்த சதித் திட்டத்தை மேற்கொண்டதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த பிரித்தானிய நாடாளுன்ற உறுப்பினர்கள் ஐவரினதும் விமான டிக்கட் பிரதிகளை சனல்4 ஊடகம் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கும் அவர்களுக்கு சார்பான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளது.
ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கட்ட வீரர் முத்தையா முரளீதரனின் அரச சார்பற்ற நிறுவனமான குட்னஸ் பவுன்டேஷன் அமைப்பின் அழைப்பிற்கு அமையவே இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXkpy.html
Geen opmerkingen:
Een reactie posten