இரகசியமாய் அமெரிக்க முக்கியஸ்தர்களை சந்திக்க முயற்சிக்கும் பசில்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சத்தம் சந்தடியின்றி அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருக்கின்றார் என்று கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. புதுவருடத்தை ஒட்டி ஜனாதிபதி அம்பாந்தோட்டை, தங்காலை, மெதனமுல்ல பகுதியில் உள்ள தமது பாரம்பரிய இல்லத்தில் குடும்பத்தினருடன் சம்பிரதாயபூர்வ நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் மற்றைய சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார். ஆனால் சகோதரர் பஸில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. அவர் அமெரிக்காவில் குடும்பதினருடன் புதுவருடத்தைக் கொண்டாடச் சென்றிருக்கின்றார் என்று கூறப்பட்டது. ஆனாலும் அவரின் அமெரிக்க விஜயத்தின் பின்னால் வேறு சூட்சுமங்களும் புதைந்திருக்கின்றன என்று கொழும்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் ஆழமான பாதிப்புக்களை அரசுத் தலைமை உணரத் தொடங்கியுள்ள இச்சமயத்தில், அந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கான சில முன்னெடுப்புக்களை அமெரிக்க மற்றும் ஐ.நா. மட்டங்களில் மேற்கொள்ளும் சில திட்டங்களுடன்தான் பஸில் ராஜபக்ஷ அங்கு சென்றிருக்கின்றார் என்கின்றன அந்த வட்டாரங்கள்.
அமைச்சர் பஸிலின் தற்போதைய முயற்சிகளில் இதுவரை முன்னேற்றம் கிட்டாத சூழலில் அத்தகைய எத்தனங்கள் பற்றிய தகவல்களையும் கொழும்பு இப்போதைக்குப் பகிரங்கப்படுத்துவதை விரும்பாது என்றும் அவற்றை அமுக்கி விடவே அவை முயற்சிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
http://www.jvpnews.com/srilanka/65817.html
யுத்த அட்டூளியங்களை வெளியிடத் தயாராகும் இராணுவ முக்கியஸ்தர்கள்! அதிர்ச்சியில் மகிந்த….
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஏற்பாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல், தென்னிலங்கைத் தரப்பிலிருந்து
அதுவும் படைத் தரப்பிலிருந்தே – வலுவாக முன் வைக்கப்படவுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் அரசுத் தலைமைக்குக் கிட்டியிருக்கின்றதாம்! இதனால் அரசுத் தலைமை அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. யுத்தக் காலத்தில் படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலர் யுத்தம் முடிவுற்ற காலத்தில் அரசுத் தலைமையுடன் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறி, பிறநாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளின் சாட்சியங்களுக்கு மேலும் வலுவூட்டும் விதத்தில் வைக்கப்படக்கூடிய படைத் தரப்பு சாட்சியங்கள் மிகப் பாரதூரமான விளைவுகளை சர்வதேச மட்டத்தில் இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு ஏற்படுத்தும் என்பது ஆட்சித் தலைமைக்கு எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் ஆட்சித் தலைமை ஆடிப்போயிருப்பதாகவும் கூடத் தகவல்.
இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால், அவ்வாறான சாட்சியங்களை மறுத்துரைக்கும் விதத்தில் நேரடியாக அத்தகைய மன்றில் ஆஜராகி சான்றளிக்க முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தயாராக இருக்கின்றார் என்ற தகவல் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் அரசுத் தலைமைக்குக் கோடிகாட்டப்பட்டுள்ளதாகவும் ஆனால், அதத்தகைய விவகாரத்துக்கு இணங்கி இடமளித்து, அந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது தென்னிலங்கை அரசியலில் சரத் பொன்சேகாவுக்கு கதாநாயகன் அந்தஸ்தைத் தேடிக் கொடுத்து அவரைப் பெரிய ஆள் ஆக்கி, தமக்கு அரசியல் பின்னுதைப்பை வாங்கித் தந்துவிடும் என்பதால் அந்த யோசனையை அரசுத் தலைமை சாதமாகப் பரிசீலிக்கவேயில்லை எனவும் தெரியவந்தது.

http://www.jvpnews.com/srilanka/65820.html
Geen opmerkingen:
Een reactie posten