தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம்!


புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது!– ரொஹான் குணரட்ன
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 08:21.47 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் அரசாங்கம் தோற்கடித்த போதிலும் ஊடக கள முனையில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதிலிருந்து பாரியளவிலான பிரசாரப் போராட்ட இயக்கமாக பரிணமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலியான தகவல்களின் அடிப்படையில் புலிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசார போராட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை இராஜதந்திரிகள் கூடுதல் முனைப்பு காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் காத்திரமான தொடர்புகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் ஊடகங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதிகள் அல்லாத இளம் அரசியல் தலைவர்களை இலங்கை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அதிகளவான தமிழ், முஸ்லிம்களை பாதுகாப்புப் படையில் அரசாங்கம் இணைத்துக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலியான செய்திகளை முறியடித்து உண்மையான தகவல்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நந்தகோபன் என்ற புலித் தலைவரை கைது செய்தமை புலிகளுக்கு எதிரான முக்கிய திருப்பு முனையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் மாற்றம் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்தினால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் மீள யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம்!
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 09:16.01 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொய்யான வாக்குறுதிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிப்பட்டிருக்கின்றன
அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வடக்கு கிழக்கு மாகாண மக்களின் காணிகள் தொடர்பாக குரல் எழுப்பும், ஒரே ஒரு அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என மக்களிடம் பொய் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களுள் எஸ்.யோகேஸ்வரன், பி.அரியநேத்திரன், மற்றும் பொன்.செல்வராசா ஆகியோர் இன்று கிழக்கு மக்கள் மத்தியில் பொய் காரர்களாக விளங்கியுள்ளார்கள்.
ஐயங்கேணி பகுதியிலுள்ள நரசிம்ம வைரவர் கோவிலின் முனால் உள்ள காணி தொடர்பாக பிரச்சினையை பேச்சுவார்ததை மூலம் தீர்ப்பதற்கு மக்கள் ஒன்று திரள்வதை அறிந்த எஸ்.யோகேஸ்வரன் உட்பட அவரது பாராளுமன்ற குழுவினர் அந்த இடத்திற்கு சமூகமளித்து வழமைபோல் மீட்பாளர்களாக காட்சியளித்தார்கள்.
அன்று படம் ஒட்டிச் சென்றவர்கள், இன்றுவரை ஐயங்கேணி மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கோ, அது குறித்து தேடிப்பார்ப்பதற்கோ இதுவரை முன்வரவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின், பொய்யான வாக்குறுதிகளையும் ஏமாற்று நாடகங்களையும், நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் மக்கள், அதைத் தீர்க்கும் வழியையும் கண்டு விட்டார்கள்.
அதுதான் ஆளும் கடசியின் கல்குடா அமைப்பாளர் சந்திரபால ஊடாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் முன்வைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஐயங்கேணி பிரதேசத்தில் அளும் கடசியின் அலுவலகம் ஒன்றைத் திறக்குமாறு அப்பிரதேச மக்கள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கேட்டுள்ளனர்.
இதன் மூலம் தெரியவருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன் உள்ளிட்ட பொய் நடிகர்களை மக்கள் வெறுத்து விட்டார்க்ள என்பது புலனாகின்றது.
மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கி அப்பாவி மக்களின் பெறுமதியான வாக்குகளை சூறையாடி நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவியுள்ள இவர்கள் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒருநாளும் முன்வரவில்லை. முன்வரவும் மாட்டார்கள்.
யோகேஸ்வரன் உள்ளிட்ட இவர்கள் சுய நலத்துடனும் சுகபோகத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.
இவ்வாறு  அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten