தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

கோபியின் தாயார் உள்ளிட்ட 18 பேர் பிணையில் விடுதலை!


வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும்  கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.
கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரும் ஏனைய சந்தேகநபர்களும் நேற்று கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten