2009 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல கடல் வழியை பயன்படுத்திய 4145 இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லப் பயன்படுத்திய 88 டிரேலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற் படைப்பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் சென்ற இலங்கையர்களின் புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை.
அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினரின் கப்பல்களுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா வழங்கும் இரு கப்பல்கள் இன்னும் 2 மாதங்களில் இலங்கை வந்து சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் பறப்பில பாதுகாக்கும் கடற் படையினரின் ஒத்துழைப்புடன்தான் தரகர்கள் செயற்படுகின்றனர்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபாடும் எந்த ஒரு உயர் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது
Geen opmerkingen:
Een reactie posten