தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு - நல்லூரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை



கோத்தபாயவின் மனைவியின் புகைப்பட விவகாரம்: பத்திரிகையின் உதவி ஆசிரியரும் விசாரணைக்கு!
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 04:09.10 AM GMT ]
பாதுகாப்பு செயலாளரின் மனைவி தொடர்பில் தமது பத்திரிகையில் படம் ஒன்றை பிரசுரித்தமை குறித்து லக்பிம பத்திரிகையின் உதவி ஆசிரியரும் நேற்று பாதுகாப்பு தரப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஏற்கனவே பத்திரிகையின் ஆசிரியர் சமன் வகா ஆராச்சியும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
சிவில் பாதுகாப்பு நிகழ்வு ஒன்றின்போது பாதுகாப்பு செயலாளரும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் அமர்ந்திருக்கும் படம் குறித்த பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மற்றும் ஒரு பெண் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கும் ஒரு ஆவணத்தை மையமாகக் கொண்டு அது போலி நாணயத்தாளா? என்ற தலைப்பை பத்திரிகை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பிலேயே லக்பிம ஆசிரியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள லக்பிம பத்திரிகையின் ஆசிரியர் வகா ஆராச்சி, தாம் படத்துக்கு கீழ் இருந்த தலைப்பை கவனிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த படம் பிரசுரிக்கப்பட்டமைக்காக தாம் அடுத்த நாள் பிரசுரத்தில் மன்னிப்பு கோரியமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmp1.html
சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு - நல்லூரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 04:35.49 AM GMT ]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட சுழிபுரம் மத்தி, சுழிபுரம் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் வைத்து தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, குறித்த சிறுமி,  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இச்சிறுமி 11 ஆம் தரத்தில் கல்வி பயன்று வருவதாகவும், தான் அருகில் உள்ள கடைக்கு செல்லும் போதெல்லாம் சந்தேக நபர் தன்னிடம் கதைப்பதற்காக தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி பாடசாலை விட்டு வீடு வந்து பகலுணவு உட்கொண்ட தன் பின்னர், வீட்டில் எவருமில்லாத சமயம் மேற்படி நபர், தன் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து எவரிடமும் கூற வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதிதான் பாடசாலை சென்று திரும்பும் போது தன்னை இடைமறித்து அருகிலுள்ள பாழடைந்த காணிக்குள் தன்னைக் கொண்டு சென்று
மீண்டும் பாலியல் உறவுக்கு உட்படுத்த முயன்ற போது அந்நபரிடம் இருந்து தப்பியோடி வந்துவிட்டதாகவும் இவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நல்லூரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை
நல்லூர் பகுதியில் நேற்று இரவு 9 கடைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு மேற்குப்புறமாக பருத்தித்துறை வீதியிலுள்ள 6 கடைகள் உடைக்கப்பட்டு 5 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய உடுபுடவைகள் திருடப்பட்டுள்ளதுடன், பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
தொடராக இக்கடைகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் உதவியுடன் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு மேற்காக உள்ள சிவன் வீதியிலும் மூன்று கடைகள் உடைக்கப்பட்ட போதிலும் திருடப்படவில்லை. வெளிக் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இத்திருட்டுச் சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmp2.html

Geen opmerkingen:

Een reactie posten