தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

ஐ.நா விசாரணையை நிராகரித்த காரணத்தினாலேயே இலங்கை விஜயத்தை ரத்து செய்தோம்!- பிரிட்டன் பா.உ.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்படவுள்ள விசாரணைகளை நிராகரித்த காரணத்தினாலலேயே இலங்கை விஜயத்தை இறுதி நேரத்தில் ரத்து செய்தோம் என பிரி;த்தானிய பாராளுமன்ற உறுப்பினர் செரோன் ஹொட்க்சன் (Sharon Hodgson) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
பிரபல கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரனின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சில பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தனர்.
எனினும், இந்த விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமது நீண்ட கால கோரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlu7.html

Geen opmerkingen:

Een reactie posten