[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 08:25.43 AM GMT ]
தனக்கு நெருக்கமான அமைச்சர்களை அலரி மாளிகையை நேற்று முன்தினம் வரவழைத்த ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் அரசியலுக்கு வரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
இதனால் குழப்படைந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைச்சர்களான திலான் பெரேரா, மேர்வின் சில்வா, நிர்மல கொத்தலாவல, ரோஹித்த அபேகுணவர்தன, சரண குணவர்தன ஆகியோரை அழைத்து, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊடகங்கள் மூலம் விமர்சன ரீதியான தாக்குதல்களை தொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான ஊடக நடவடிக்கைளில, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசுடன் இணைந்து கொண்டவர்களையோ, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ போன்றவர்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார்.
இதனடிப்படையில், புலம்பெயர் தமிழர்களின் தாளத்திற்கு ஆட்டம் போடும் ஐரோப்பிய நாடுகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை ஆட்சிக்கு கொண்டு வரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுமாறும் இதன் போது கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை, அமைச்சர் அழகபெரும வழங்கியதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnv6.html
இந்த நாட்டிலே தமிழ் இனம் வாழ்வதா? சாவதா?: மா.உ ஞா.கிருஸ்ணபிள்ளை கேள்வி
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 07:23.14 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய மக்கள் சந்திப்பிலேயே இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். இவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது தமிழ்த்தலைவர்கள் என்றைக்குமே பிரிவினைவாதம் பேசவில்லை 1948 ஆம் ஆண்டிற்கு முன்பே இந்த நாட்டிலே வாழ்ந்த சிங்களப்பெரும்பான்மை இனத்தோடு சேர்ந்து ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தார்கள்.
இதற்குப் பின்னர் இந்த நாட்டிலே மாறிமாறி வந்த பேரினவாத அரசாங்கங்கள் அனைத்தும் தமிழ்மக்களை பிரியச்சொன்னார்கள், பிரிந்து போகச் சொன்னார்கள் ஆனால் தமிழ்த்தலைவர்கள் பிரிந்து போகவில்லை மாறாக சமஸ்டியைக் கேட்டார்கள் ஆனால் இந்த பேரினவாத அரசாங்கங்கள் எதையுத் தருவதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
இந்த நாட்டிலே யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் இந்த நாட்டு ஜனாதிபதி எந்த மேடையில் ஏறினாலும் 13 பிளஸ் என்ற நாமத்தினைக்கூறி அதற்கும் மேலான தீர்வினைத் தருவதாக கூறியிருந்தார் ஆனால் போர் முடிந்ததன் பிற்பாடு 13 பிளஸ் முற்றாக விடுபட்டு பூச்சியமும் இல்லாத நிலையே இன்று உள்ளது.
இந்த நாட்டிலே தமிழ் இனம் வாழ்வதா? சாவதா? இரண்டில் ஒன்றை தெரிவு செய்யவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இன்று இந்த நாட்டிலே சோசலிசம், சமதர்மம் பேசுகின்றவர்கள் இந்த நாட்டிலே சிறுபான்மை இனம் ஒன்று இல்லை என்று கூறுகின்றார்கள் மற்றும் விமல் வீரவம்ச, சம்பிக்க ரணவக்க போன்ற அதி தீவிரவாதப்போக்குக் கொண்ட இவர்கள் பிரிவினைவாதம் பேசுகின்றார்கள். எங்கள் தலைவர்கள் ஏனைய இனத்தின் உரிமைகளைக்கேட்கவில்லை மாறாக நாங்கள் இழந்த உரிமையை எங்களிடம் இருந்து பறிக்கப்ட்ட உரிமையைத்தான் கேட்கின்றோமே தவிர வேறு எதனையும் புதிதாக கேட்கவில்லை என்பதனை இவர்கள் போன்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டிலே நாங்களும் ஆதிக்குடிமக்கள் ஆண்ட பரம்பரை யாராவும் ஆளப்பட்டவர்கள் அல்ல நாங்களும் இந்த நாட்டிலே சமமாக வாழ நினைக்கின்றோம் அதனை செய்து தாருங்கள் என்றுதான் இந்த அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.
நாம் சலுகைகளுக்காக அரசாங்கத்துடன் வாழ்பிடித்தவர்களும் அல்ல இனிமேலும் வாழ்பிடிக்கப்போபவர்களும் அல்ல உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள்தான் நாங்கள் இந்த நாட்டிலே ஒரு தமிழன் இருக்கும் வரைக்கும் எங்களது உரிமைக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
எமது சமுதாயத்தில் விளிப்புணர்வு கிடையாது இது எமது தலைவர்களிடமும் இல்லை இதனால் கடந்த காலங்களை போன்று காலம் கடத்தாமல் ஒற்றுமையின் பால் செயற்பட்டு இவ்வாரான மக்கள் சந்திப்புக்களை செய்து மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் பாடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnv4.html
Geen opmerkingen:
Een reactie posten