[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 11:48.06 AM GMT ]
மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் முழு வரலாற்றிலும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்குலக நாடுகளுக்கு தேவையான வகையில் செயற்பட்டனர்.
போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் கூறும் போது இலங்கையின் ஆட்சியாளர்கள் அதனை நிறுத்தினர்.
தேர்தல் ஒன்று நெருங்கி வரும் போது போரை ஆரம்பிக்குமாறு மேற்குலக நாடுகள் கூறின. இவ்வாறு மேற்குலக நாடுகள் கூறியபடி செயற்பட்ட தலைவர்களுடன் நாங்கள் வாழ்ந்தோம்.
நெஞ்சை நிமிர்த்தி தீர்மானம் ஒன்றை எடுத்து நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்தன் காரணமாகவே ஜனாதிபதியை போர்க்குற்றவாளி என்கின்றனர்.
நாட்டில் வாழும் சகல இனங்களுக்கு சுதந்திரமாக வாழ வழியை ஏற்படுத்திக்கொடுத்தது போர்க்குற்றமா?.
கிராமங்களை அபிவிருத்தி செய்து, விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கி, துறைமுகங்கள், விமான நிலைங்கள் வீதிகளை நிர்மாணித்தது போர்க்குற்றமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
சில எதிர்க்கட்சியினருக்கு இந்த அபிவிருத்திகள் போர்க்குற்றங்கள். அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்பதே இதற்கு காரணம்.
இதனால் ஜே.வி.பியும், ஐக்கிய தேசியக் கட்சியும் அபிவிருத்திகளை போர்க்குற்றங்களாக பார்க்கின்றன எனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlq1.html
சிங்கள மக்களை போன்று ஏனைய மக்களுக்கும் சுயமரியாதை உள்ளது: டியூ.குணசேகர
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 11:58.08 AM GMT ]
தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முதலில் நாம் நல்ல பண்புகளை கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற இடதுசாரி அமைப்புகளின் ஆரம்பகால செயற்பாட்டாளரான எஸ்.ஏ. விக்ரமசிங்கவின் 119 வது ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlq2.html
அவசர காலச் சட்டம் மக்களை அடக்க பயன்படுத்தப்படுகிறது: கரு ஜயசூரிய
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 11:41.57 AM GMT ]
மக்களை அடக்குவதற்காக அவர் அதனை பயன்படுத்தவில்லை. மக்களின் உரிமைகளை வழங்குவதற்காக டட்லி சேனாநாயக்க அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தினார் எனவும் அவர் கூறினார்.
பொரள்ளையில் இன்று நடைபெற்ற டட்லி சேனாநாயக்கவின் 41 வது சிரார்த்த தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டட்லி சேனாநாயக்க சலுகைகளுக்காக கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் வஞ்சக அரசியலில் ஈடுபடவில்லை.
தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் முதலாளிமார் அதனை வழங்காததால், பிரதமராக இருந்த டட்லி, அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி தனியார் துறை ஊழியர்களின் உரிமையை பெற்றுக்கொடுத்தார்.
எனினும் அவசரகாலச் சட்டம் தற்போது இதற்கு முரணாக மக்களை அடக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்துவதை டட்லி எதிர்த்தார்.
டட்லி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வகித்திருந்தால் மக்கள் ஒரு போதும் அதனை மாற்றுமாறு கூறியிருக்க மாட்டார்கள்.
அரசியல்வாதி இன்றைய நாள் குறித்து சிந்தித்து செயற்படுவர் எனவும் ராஜதந்திரி எதிர்கால சந்ததியை சிந்தித்து செயற்படுவர் என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உள்ளது.
டட்லி சேனாநாயக்க அப்படியான ராஜதந்திரியாக நான் காண்கின்றேன் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlq0.html
Geen opmerkingen:
Een reactie posten