[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 10:58.54 PM GMT ]
ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இலங்கையின் பிரபல சிங்கள பாடர்களான ரூக்காந்த மற்றும் சந்திரலேகா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியமைக்காக 10 ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு நான்கரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் வெலிக்கடை மற்றும் மத்தறை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் அவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுகின்றவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி இவ்வாறு பொது மன்னிப்பை துஸ்பிரயோகம் செய்வதாக அந்த பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXko5.html
நம்பகூடாத நாடு இந்தியா என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 10:52.40 PM GMT ]
இன்று அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பிரேரணை வாக்கெடுப்புக்கு உட்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் மேலும் இரண்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் போதிய நிதி இல்லை என்ற ஒரு பிரேரணையை பாகிஸ்தான் முன்மொழிந்தது.
இதற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த பிரேரணையில் உள்ள யுத்தம் குற்ற விசாரணையை கோரும் 10 வது சரத்தை நீக்குமாறு பாகிஸ்தான் மற்றுமொரு யோசனையை முன்வைத்தது.
இதற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தது.
இறுதியாக அமெரிக்க பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தாம் கலந்துக் கொள்வதில்லை என்று இந்திய அறிவித்தது.
இதன் மூலம் இந்தியா சர்வதேசவிசாரணைக்கு அஞ்சிகிறது என்றும் இந்தியாவை ஒருப் போதும் நம்ப கூடாது என்பதும் புலானாகி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் போரிட்ட இந்திய இராணுவம்!
இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடாபில் டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம்சங்கர் என்பவர், இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் சீக்கியர் ஒருவர் இலங்கையில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தை வழி நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் பிரகடனம் செய்யப்படாத நிலையில், இந்திய அரசியல் அமைப்பின் படி, இந்திய படையினரை இலங்கையில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை மறுதினம் இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXko4.html
Geen opmerkingen:
Een reactie posten