தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

யாழ். பருத்தித்துறையில் பல மீனவ குடும்பஸ்தர்கள் கைதால்! பதற்றத்தில் மக்கள் !

சர்வதேச விசாரனைக்கு சாட்சி வழங்குவோரது பாதுகாப்புக் குறித்து சிந்திக்கப்படும் – UN

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைக்கு சாட்சி மற்றும் ஆதாரங்களை வழங்கும் தரப்பினருக்கான பாதுகாப்பு குறித்து பின்னர் சிந்திக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சபையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கோரிக்கை அடிப்படையில் இலங்கைக்கு எதிரான விசாரணைக்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன.
இதற்கான நிதி ஒதுக்கம் மற்றும் குழு நியமனம் என்பன மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த குழுவில் சாட்சி வழங்குவோரது இரகசியங்களை பேணும் முறைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/64712.html

யாழ். பருத்தித்துறையில் பல மீனவ குடும்பஸ்தர்கள் கைதால்! பதற்றத்தில் மக்கள் !

யாழ் பருத்தித்துறைமுனையில் கடலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தமிழ் மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தசில மாதங்களாக தமிழர் தாயக பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் மிலேச்சத்தனமான அடாவடி கைதுகள் கடத்தல்கள் என்பன வகை தொகையாக நடைபெறுவது யாவரும் அறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தாயக நேரம் 12.30 ற்கு கடற்கரையில் வைத்து கடற்தொழிலுக்கு சென்று விட்டு கரைதிரும்பிய மீனவர்களான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான மோ.வின்சன் மரியதாஸ்(42) , நான்கு பிள்ளைகளின் தந்தையான பத்திநாதன் ரெஜினோல்ட் (40), நான்கு பிள்ளைகளின் தந்தையான மிக்கேல்பிள்ளை (45) , ஐந்து பிள்ளைகளின் தந்தையான பாபு (44), மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜா (30) என்ற ஐவரையும், கரையில் காத்துநின்ற சிறிலங்கா பயங்கரவாத புலனாய்வாளர்களும், காவற்துறையினரும் கைது செய்து பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர் . பின்பு அங்கிருந்து அவர்களை இடம் மாற்றி வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பாவி குடும்பங்கள் தமது அன்றாடம் தொழிலுக்கு சென்றுவிட்டு வந்தாலும் அவர்கள் குடும்பஸ்தர்கள் என்றும் பாராது கண்மூடித்தனமாக அவர்களை கைது செய்தது அப்பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/64715.html

Geen opmerkingen:

Een reactie posten