தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

தமிழ்நாட்டு பெருமாள்புர முகாமில் உள்ள இலங்கை அகதிகளை 2 நாட்களுக்கு வெளியில் செல்ல தடை!

சோனியா காந்தியின் தமிழ்நாட்டு வருகையை முன்னிட்டு பெருமாள்புர முகாமில் உள்ள இலங்கை அகதிகளை 2 நாட்களுக்கு வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் விதமாக நாளை காலை கன்னியாகுமரிக்கு செல்லவுள்ளார்.

இதையடுத்து கன்னியாகுமரி நகரம் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு வரும் உள்ளூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் விவேகானந்தபுரம் மற்றும் மகாதானபுரம் பகுதிகளில் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இது தவிர அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கியிருப்போர் பட்டியல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 210 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி கன்னியாகுமரி வருகை!- இலங்கை அகதிகள் வெளியில் செல்லத் தடை
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 07:35.25 AM GMT ]
சோனியா காந்தியின் தமிழ்நாட்டு வருகையை முன்னிட்டு பெருமாள்புர முகாமில் உள்ள இலங்கை அகதிகளை 2 நாட்களுக்கு வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் விதமாக நாளை காலை கன்னியாகுமரிக்கு செல்லவுள்ளார்.
இதையடுத்து கன்னியாகுமரி நகரம் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு வரும் உள்ளூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் விவேகானந்தபுரம் மற்றும் மகாதானபுரம் பகுதிகளில் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இது தவிர அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கியிருப்போர் பட்டியல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 210 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlxy.html

Geen opmerkingen:

Een reactie posten