தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் போரிட்ட இந்திய இராணுவம்!

பொதுநலவாய நாடுகளுக்கான நிதி உதவியை இடைநிறுத்தியது கனடா
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 02:26.39 AM GMT ]
இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவியை கனடா இடைநிறுத்தியுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்காக கனடா ஆண்டு தோறும் 10 மில்லியன் டொலர்களை வழங்கி வருகின்றது.
எனினும், இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக இந்த நிதி உதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியிருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பிலான பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து கனடா கரிசனை கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜொன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
சிறு பராய திருமணங்களை நிறுத்தவும் அது தொடர்பில் தெளிவுபடுத்தவும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlw0.html
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் போரிட்ட இந்திய இராணுவம்!
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 06:24.32 AM GMT ]
இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடாபில் டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம்சங்கர் என்பவர், இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் சீக்கியர் ஒருவர் இலங்கையில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தை வழி நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் பிரகடனம் செய்யப்படாத நிலையில், இந்திய அரசியல் அமைப்பின் படி, இந்திய படையினரை இலங்கையில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை மறுதினம் இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlw4.html

Geen opmerkingen:

Een reactie posten