[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:00.41 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
30 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மதுபானம் பயன்பாடு காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகமான ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றது. உயர்கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களும் இவ்வாறு மதுபானம் அருந்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மாணவர் ஒருவர் தண்ணீர் போத்தலில் பியர் கொண்டு சென்றதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மதுபானம் காரணமாக பிரதேசத்தில் வன்முறைச் சம்பங்கள் உயர்வடைந்துள்ளன.
காணாமல்போன எனது மகளை கண்டுபிடித்துத் தாருங்கள்!- நாமலின் காலில் கண்ணீரோடு விழுந்த தாய்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:13.55 PM GMT ]
கிளிநொச்சி சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு தாயொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்றாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச யாழ்.மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டதாரிகள் மாநாட்டில் அதிதியாக கலந்து கொண்டார்.
மாநாட்டை நிறைவு செய்துவிட்டு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடமே குறித்த தாய் கண்ணீருடன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தனது மகளைக் காணவில்லை எனவும் இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என்று அந்த தாயார் தெரிவித்தள்ளார்.
இந்த தாயாரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நாமல் ராஜபக்ச உடனடியாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten