[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:53.48 PM GMT ]
இரத்தினம் வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிப பெண்மணியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கனிமொழியின் அலுவலக முகவரிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை முதலில் கனிமொழி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் அதே மாதிரியான இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பிறவியிலேயே கண் பார்வையற்ற இவர், இன்று அதிகாலை கிணற்றடிக்குச் செல்லும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் காலை 6.30 மணியளவில் இவரைத் தேடிப் பார்த்த போது இவர் கிணற்றுக்குள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர்.
மரண விசாரணையை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீதி விபத்தில் குடும்பஸ்தர் மரணம்!
மோட்டார் சைக்கிளில் வந்தவர் வீதியில் குவிக்கப்பட்டிருந்த கிரவல் கற்கள் மீது தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் சாவகச்சேரி சரசாலை மேற்கைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி (வயது 50) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
நேற்று மாலை 6 மணிக்கு மோட்டர் சைக்கிளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மதுபோதையுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வீதித் திருத்தத்திற்காக போடப்பட்டிருந்த கற்குவியலுக்குள் தவறி விழுந்து காயமடைந்தார்.
படுகாயமடைந்த இவரை வீதியில் நின்றவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு அவர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார்.
மரண விசாரணைகளை அடுத்து சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எம் அமைப்பு தெற்கு ஆசியா உட்பட இலங்கையிலும் பரவியுள்ளது! போராட்டத்திற்கு உதவுங்கள்! - கனிமொழிக்கு வந்த மர்மக் கடிதங்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 02:33.45 PM GMT ] [ விகடன் ]
அக் கடிதத்தில் எழுதியிருந்தமை யாதெனில்,
டியர் கனிமொழி...!
முதல் முறையாக உதவி கேட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறோம். எங்களது போராட்டத்துக்காக உங்கள் உதவியை அமைதியாகக் கேட்கிறோம். எங்களது அமைப்பு, தெற்கு ஆசியா, மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் பரவியுள்ளது. முதல் முறையாக உதவி கேட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
எங்களது போராட்டத்துக்கு 11 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 61,683 கோடி ரூபாய்) பணம் தேவைப்படுகிறது. ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்ட சில மக்களுக்காக நாங்கள் உதவத் திட்டமிட்டு இருக்கிறோம். எங்களது கோரிக்கையைத் தவிர்க்காதீர்கள். மக்களின் கண்ணீரும் இரத்தமும் துடைக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கிறோம். நாங்கள் கேட்கும் பணம் உங்களுக்கு சிறிய தொகைதான்.
எங்களை நீங்கள் தொடர்பு கொள்வது உங்களுக்கும் பிரச்சினை. எங்களுக்கும் பிரச்சினை. நமக்குள் தொலைபேசி வழியாக எந்த உரையாடலும் வேண்டாம். எங்களை நீங்கள் மெயில் மூலமாக மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். அதிலும் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், எங்களது அமைப்பின் இந்திய பிரதிநிதி நியாஸ் ட்ரீஸ் அல்லது சூடான் நாட்டில் இருக்கும் அப்துல்லா உங்களை நேரடியாக உங்களது வீட்டுக்கே வந்து சந்திக்கத் தயாராக இருக்கிறார்.
இந்தக் கடிதத்தை உங்களது ஊரில் இருந்துதான் உங்களுக்கு அனுப்புகிறேன். ஆம்... நான் இப்போது உங்கள் ஊரில் உள்ள ஒரு தொழிலதிபரின் உதவியுடன் சென்னையில் தங்கியுள்ளேன். எங்களுக்கு நேரம் இல்லை. உடனடியாகப் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களது பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
இறைவனின் அருளுடன்,
குலாம் முகம்மது ஹுசைன்'' என்று முடிகிறது முதல் கடிதம்.
குலாம் முகம்மது ஹுசைன்'' என்று முடிகிறது முதல் கடிதம்.
இரண்டாவது கடிதத்தில்....
'கனிமொழி,
உங்கள் பதிலுக்காகக் காத்திருந்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை. இது என்னை இன்சல்ட் செய்வதாக இருக்கிறது. இந்தக் கடிதத்தை உங்களுக்கு மைலாப்பூர் போஸ்ட் ஆபீஸில் இருந்துதான் போஸ்ட் செய்கிறேன்.
நாங்கள் கேட்ட உதவியை நீங்கள் உதாசீனப்படுத்தி விட்டீர்கள். இந்தியாவில் எங்களது முதல் டார்கெட் நீங்கள்தான். உங்களைக் கொல்வதற்கு முன், மரணத்துக்கான அர்த்தத்தை உங்களுக்குக் காட்டுவேன்.
உங்களுக்கு மத்திய அரசோ, மாநில அரசோ உதவி செய்யாது. உங்களையும் பாதுகாக்காது. நான் இன்று ஹைதராபாத் கிளம்புகிறேன். என்னை யாரும் பிடிக்க முடியாது. உங்களைக் கொல்ல நானே வருவேன் என்று நினைக்க வேண்டாம். உங்களது வீட்டில் இருப்பவர்களோ அல்லது உங்களது பாதுகாவலரோ அல்லது உங்கள் வேலைக்காரர்களோ அல்லது உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது உங்களது தெருவில் இருப்பவர்களில் ஒருவரோ உங்களைக் கொல்வார்கள். அந்த கொலைக்கு நான் பொறுப்பு ஏற்பேன்.
நீங்கள் எங்களுக்கு கொடுக்க மறுத்த 11 பில்லியன் பணம் உங்கள் உயிரைக் காக்காது. வயதான உங்களது அப்பாவோ, அம்மாவோ உங்களது உடல் துண்டுகளை முழுமையாகச் சேகரிக்க முடியாது. உங்களுக்கு ஒரு மகன் இருக்கும் தகவலும் இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. நல்லது. அவனைப் பற்றியும் யோசியுங்கள்.
மறுபடியும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். 28-மே-2013 தேதிக்குள் உங்களது பதிலை எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் உங்களது மரணத்தை நான் பகிரங்கமாகவே அறிவிப்பேன்.
இறைவனின் அருளுடன்,
குலாம் முகம்மது ஹுசைன்''
குலாம் முகம்மது ஹுசைன்''
Geen opmerkingen:
Een reactie posten