[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:37.58 PM GMT ]
வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இதற்கு முன்னர் சென்னையில் இலங்கை உதவி உயர்ஸ்தானிகராக பணியாற்றி வந்தார்.
இலங்கைக் கடற்படைக் கப்பல்களில் சீன நாட்டவர்களின் பிரசன்னம் குறித்த குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மீளழைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல்
அசீஸ் அப்துல் ரஹ்மானும், மீண்டும் கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துக்கு திரும்பியுள்ளார்.
அசீஸ் அப்துல் ரஹ்மானும், மீண்டும் கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துக்கு திரும்பியுள்ளார்.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் 1.5 மில்லியன் இலங்கையர்களில், 5 லட்சம் பேர் சவூதி அரேபியாவில் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் சவூதிக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடற்படை படகுகளில் சீனர்கள்! இந்திய ஊடகங்களின் செய்திகளை மறுக்கிறது இலங்கை கடற்படை!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:26.37 PM GMT ]
கச்சதீவு பகுதியில் நங்கூரமிடப்பட்ட இலங்கைக் கடற்படை கப்பல்களில் சீனர்களை பார்த்ததாக இந்திய ஊடகங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
கடற்படை வீரர்களும் உத்தியோகத்தர்களும் தவிர்ந்த எவரும் கடற்படை படகுகளில் பயணிப்பதில்லை என கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
கச்சதீவு பகுதியில் ஆறு கடற்படை கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten