[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 09:59.11 AM GMT ]
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகம்மத் சுபியுர் ரஹ்மான் (Mohammad Sufiur Rahman) இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
வடமாகாண ஆளுனர் சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி காத்தான்குடியில் நடத்தவிருந்த கூட்டத்திற்கு நகர சபை அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இச்சந்திப்பில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் கூடுதல் விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
இதற்கிடயே எதிர்பாராதவிதமாக ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில முயற்சி அபிவிருத்தி டக்ளஸ் தேவானந்தாவும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடலொன்றை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸாத் சாலி நடத்தவிருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு- காத்தான்குடி நகர சபைத் தலைவர் பிணையில் விடுதலை
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 10:06.56 AM GMT ]
இதனால் கூட்டம் நடாத்துவதை கைவிட்டுள்ளதாக அந்த கூட்டத்தின் எற்பாட்டாளரும் கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி எதிர்வரும் 29ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கூட்டம் ஒன்றை நடாத்தவிருந்தார்.
இந்த கூட்டத்தை கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்கு காத்தான்குடி நகர சபையிடம் அனுமதி கேட்ட போதே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டத்தின் எற்பாட்டாளரும் கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு அஸாத் சாலி நன்றி தெரிவிக்கும் வகையில், கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தின் அனுமதி கோரி நகர சபைக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்தோம். அக்கடிதத்தை அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர் பாறூக் என்பவர் மேலதிக நடவடிக்கைக்காக காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் என்பவருக்கு அனுப்பினார்.
இதையடுத்து காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமை சந்தித்து அனுமதி கேட்டோம். ஆனால் அவர் அனுமதி தரமுடியாது என மறுத்து விட்டார் என்றார்.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமை தொடர்பு கொண்டு கேட்ட போது,அனுமதியை மறுக்கவில்லை சில நிபந்தனைகள் தொடர்பாக பேசுவதற்கு கூட்டத்திற்கான மண்டப அனுமதியை கோரியவர்களை வருமாறு அழைத்தேன் என்றார்.
எனினும் இந்த கூட்டம் மண்டப அனுமதி மறுப்பினால் காத்தான்குடி கூட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் மேற்படி பஸ்லி தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை தலைவர் பிணையில் விடுதலை
காத்தான்குடி நகர சபை தலைவர் மற்றும் அதன் உறுப்பினர் சரீரப்பிணையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் மைய்யவாடிக்காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்த வழக்கு தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர்களையும் கட்நத 18ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பியிருந்தது.
இந்த அழைப்பாணைக்கு காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் அதன் உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரும் சமூகமளிக்கத்ததால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இவர்கள் இருவருக்கும் கடந்த 18ம் திகதி பிடியானை பிறப்பித்தார்.
இந்த நிலையில் இன்று காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜராகினர்.
இதன் போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையம் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி அப்துல்லா எதிர்வரும் 2ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
Geen opmerkingen:
Een reactie posten