தமிழ் கூட்டமைப்பு பா. உறுப்பினர்கள் - அமெரிக்க தூதரக அதிகாரி சந்திப்பு! கிழக்கு நிலைமைகளை தெளிவுறுத்தினர்!
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 10:42.46 AM GMT ]
இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நிலைப்பாடு பற்றியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள், சமகால அரசியல் நிலைமைகள், தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான நிலைப்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் 13வது திருத்தச் சட்டம் பற்றியும் ஆராயப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தாங்கள் சுதந்திரமாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முனையும் போது இராணுவம் உட்பட புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் நடவடிக்கைளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதை குறிப்பிட்டனர்.
குறிப்பாக தங்களுடன் தொடர்பை வைத்திருப்பவர்களை புலனாய்வு பிரிவினர் எச்சரிப்பதையும், தாங்கள் மேற்கொள்ளும் ஒன்று கூடலை தடுப்பதில் பாதுகாப்பு தரப்பினரும், புலனாய்வு பிரிவினரும் கடுமையாக செயற்படுவதையும் சுட்டிக்காட்டினர்.
காணி சுவீகரிப்பு, விகாரை அமைப்பு, சிங்கள மக்கள் குடியேற்ற திட்டம், இந்திய வீட்டுத் திட்ட நடவடிக்கை, இன மத அடையாளங்களை மாற்றல், ஆலயங்களின் விக்கிரக உடைப்பு போன்ற விடயங்களும் தெளிவுறுத்தப்பட்டது.
அத்தோடு கடந்த கால கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும் எடுத்துக் கூறினர். மேலும் பல விடயங்கள் இச்சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
திஸ்ஸ விதாரணவுக்கு இடம்கொடாத தெரிவுக்குழுவில் தமிழ் கூட்டமைப்புக்கு நியாயம் கிடைக்குமா?- மனோகணேசன், கம்மன்பிலவிடம் கேள்வி
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 10:21.02 AM GMT ]
இந்த நிலையில்தான் இங்கே வந்து ஜாதிக ஹெல உறுமையவின் மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பில, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தெரிவுக்குழுவிக்குள் வரவேண்டும், வந்து அமரவேண்டும்,என அழைப்பு விடுக்கின்றார்.
அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பாக பணியாற்றி, அரசுக்குள் அரசியல்தீர்வு என்பதற்கு அடையாளமாக தோன்றும் அமைச்சருக்கே உரிய இடம் கொடுக்கப்படாத இந்த அரசாங்கத்தின் இந்த ஒருதலைபட்ச தெரிவுக்குழுவில், குறைந்தபட்ச நியாயமாவது கிடைக்கும் என கூட்டமைப்பு எப்படி எதிர்பார்க்க முடியும்?
இத்தகைய ஒரு தெரிவுக்குழுவில் இடம்பெற்றுவிட்டு சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் எப்படி யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் ஆடையுடுத்தி போக முடியும்?
நான் தீவிரவாதியும் அல்ல. சரணடைந்து சாமரம் வீசும் அரசியல்வாதியும் அல்ல. நடைமுறை சாத்தியமான நியாயத்தைதான் நான் எதிர்பார்க்கின்றேன். அதற்கான அடையாளம்கூட இல்லை என்றால் நாம் என்ன செய்வது? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
கொழும்பிலிருந்து ஒலிப்பரப்பாகும் சிங்கள மொழியிலான தனியார் வானொலியில், நேயர்கள் நேரடியாக கேள்விகளை தொடுத்து பங்குபற்றும் நேரடி அரசியல் விவாத நிகழ்வு இடம்பெற்றது.
இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும், ஜாதிக ஹெல உறுமையவின் பிரதி பொது செயலாளரும், மேல் மாகாணசபையின் அமைச்சருமான உதய கம்மன்பிலவும் கலந்துகொண்டு விவாதித்தனர்.
இதன்போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தெரிவுக்குழு
இனப்பிரச்சினை தீர்வுக்கு என்று சொல்லி இந்த அரசாங்கம் அமைத்துள்ள தெரிவுக்குழு, ஒருதலைப்பட்சமானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடம்பெறவில்லை. அந்த கட்சிதான் முஸ்லிம் மக்களின் அதிக வாக்குகளை பெற்ற கட்சியாகும். முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரதிநிதியை உரிய நேரத்தில் தெரிவிக்காததுதான் இதன் காரணம் என நண்பர் உதய கம்மன்பில இங்கே வந்து சொல்கிறார்.
இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தன்னை தவிர்த்துகொண்டு, அமைச்சர் முத்து சிவலிங்கத்தை நியமித்ததை போல், ரவுப் ஹக்கீம் தனது கட்சி பிரதிநிதியை நியமிக்க தவறி விட்டார் என இவர் கூறுவது புதுக்கதை.
முதலில் இதொகாவின் தலைவர் தொண்டமான் இல்லை. அமைச்சர் முத்து சிவலிங்கம் தான் அந்த கட்சி தலைவர் என்பதை இவர் தெரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில், இது தமக்கு இழைக்கப்பட்ட அநீதி என்கிறார்கள். இவர் அவர்கள் மீதே பழியை தூக்கி போடுகிறார். இதற்கு முஸ்லிம் காங்கிரஸ்தான் பதில் கூறவேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் எனது நண்பர். இன்று அவருக்கு தன்னையும், தன் கட்சியையும், தன் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளும் மூன்று அவசர பொறுப்புகள் உள்ளன. இந்நிலையில் முஸ்லிம் தரப்பு பற்றி நான் என்ன பேச முடியும்? நான் பேச விரும்பவில்லை.அதுபற்றி சிலநாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால், இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தெளிவான ஒரு செய்தியை கூறியுள்ளது. நீங்கள் அதிக வாக்கு அளித்த கட்சிக்கு இடம் தராததன் மூலம், நாமாக தருவதை தவிர ஒரு அரசியல் தீர்வை உங்களுக்கு தர தயார் இல்லை என்று சொல்லி விட்டது.
அமைச்சர் திஸ்ஸ விதாரண
உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சினையைவிட, இன்னொரு விடயம் இன்று சர்வதேச கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் கீழ் எந்த ஒரு அதிகாரப்பரவலாக்கலும் இடம் பெறவில்லை. இருப்பதையும் பறித்துக்கொண்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
வெறும் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. சர்வகட்சி பேச்சுவார்த்தை என்பது அதுவாகும். அந்த செயல்பாட்டின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண. அவர்தான் அரசுக்குள், பெயரளவிலாவது இருக்கும் அதிகாரப்பரவலாக்கல் என்ற விடயத்தின் அதிகாரப்பூர்வ அடையாளம். ஆனால், அவருக்கு இங்கே இடம் இல்லை. இந்த இலட்சணத்தில் கூட்டமைப்பு வேண்டுமாம்.
இந்த சர்வகட்சி செயற்பாட்டில் கூட்டமைப்பு ஏன் இடம்பெறவில்லை என்பதை கம்மன்பில, கூட்டமைப்பிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை. நான் கூட்டமைப்பு எம்பி இல்லை.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் என்னிடம் கேட்டு முடிவு எடுப்பது இல்லை. என்னிடம் அவர் அரசியல் பேசுவதுகூட கிடையாது.
ஆனால், கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை என்பதற்காக நீங்கள் அந்த சர்வகட்சி மாநாட்டை நிறுத்தி விடவில்லை. நமது கட்சி பிரதிநிதி அதில் கிரமமாக கலந்துகொண்டார். இந்த சர்வகட்சி செயற்பாட்டின் இறுதியில், அமைச்சர் திஸ்ஸ விதாரண ஒரு அறிக்கையை, இந்நாட்டு ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இன்று, தெரிவுக்குழுவில் திஸ்ஸ விதாரணவையும் காணோம்; அவரது அறிக்கையையும் காணோம்.
உதய கம்மன்பிலவின் மாகாணசபை அமைச்சர் பதவி
ஜாதிக ஹெல உறுமையவின் பிரதி பொது செயலாளரும், மேல்மாகாணசபையின் அமைச்சருமான நண்பர் கம்மன்பில இங்கே வந்து மாகாணசபைகளுக்குக்கு எதிராக பேசுகின்றார். ஆனால், மேல்மாகாணசபையில் ஒரு உறுப்பினராகவும்,அமைச்சராகவும் இருக்கின்றார். மாகாணசபை வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றார். இது ஒரு கேலிக்கூத்து.
இதற்கு இவர் என்னை உதாரணம் காட்டுவது அதைவிட கேலிக்கூத்து. நாங்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்திக்கொண்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளோமாம். அதுபோல், தான் மாகாணசபையில் இருந்துகொண்டு, மாகாணசபையை எதிர்க்கின்றராம்.
நாங்கள் வீட்டை முழுமையாக அழிக்க நினைக்கவில்லை. வீட்டில் இருந்தபடி வீட்டை புனருத்தாபனம் செய்ய நினைக்கின்றோம். இந்த நாட்டை உடைக்க நினைக்க நான் நினைக்கவில்லை. இந்த நாட்டில் இருந்துகொண்டு, அரசியலமைப்பை சட்டப்படி ஏற்றுக்கொண்டு, மறுபுறத்தில் அதில் நான் விரும்பும் மாற்றங்களை காண விரும்புகின்றேன். அதுதான் எங்கள் போராட்டம்.
ஆனால்,உதய கம்மன்பில முழு மாகாணசபை முறைமையையே முழுமையாக அழிக்க நினைக்கின்றார். அதுதான் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு. இந்த அரசாங்கத்துக்கு உள்ளேயே மாகாணசபைகளின் காணி, போலிஸ் அதிகாரங்களை அகற்ற கோருபவர்கள் உள்ளார்கள். அவர்கள் மாகாணசபைகளில் இருந்தபடி, மாற்றங்களை கோரலாம். அவர்களுடன் நாம் வாதம் செய்வோம். அதற்கு நான் தயார்.
ஆனால் இவர் யார்? முழு மாகாணசபை முறைமையையே முழுமையாக அழிக்க நினைக்கும் இவரும்,இவரது கட்சியை சேர்ந்த ஏனைய அனைத்து ஹெல உறுமய மாகாணசபை உறுப்பினர்களும், முதலில் தம் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, மாகாணசபைகளை ஒழிப்பது பற்றி வாயை திறக்க வேண்டும்.
இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. இங்கே கேள்விகள் கேட்ட சுமார் பத்து நேயர்களில் ஒன்பது பேர் உதய கம்மன்பிலவை விமர்சித்தார்கள். சிலர் என்னை பாராட்டினார்கள். இன்னும் சிலர் என் வாதங்கள் தொடர்பில் கேள்வி கேட்டு தம் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டார்கள்.
வழமையாக இத்தகைய நிகழ்சிகளில் உண்மையான புலிகளை விட்டுவிட்டு, என்னைத்தான்"புலி" என்று கடுமையாக விமர்சிப்பார்கள். இன்று அப்படியல்ல. இதன்மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இவர்களின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்கின்றது என்று தெரிகிறது.இதற்கு நாங்கள் பெரும்பாடு பட்டு வருகின்றோம்.
இன்று கேள்வி கேட்ட நேயர்களில் ஒருவர் கொட்டாஞ்சேனை தமிழர். ஏனைய அனைவரும் சிங்களவர்கள்.
அவர்களில் பத்தரமுல்லையில் இருந்து பேசிய ஒரு அன்பர், "மாகாணசபையை திட்டி தீர்த்தாலும், அதில் பதவி வகிப்பேன் என்று சொல்வது, விபச்சாரத்தை திட்டிக்கொண்டு, விபச்சாரம் செய்பவருடன் குடித்தனம் செய்வதற்கும் சமனானது" என உதய கம்மன்பிவிடம், அவரது பெயரை சொல்லி அழைத்து நாடு முழுக்க கேட்கும் வண்ணம் சிங்கள மொழியில் சொன்னார்.
இதைவிட அதிகமாக நான் இதுபற்றி என்ன சொல்ல இருக்கின்றது? என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten