[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 09:26.21 AM GMT ]
தமிழகத்தில் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸாருக்கு திடுக்கிடும் தகவல் வெளியானது.
பொலிஸாரிடம் சிக்கிய மர்ம படகு நாகை மாவட்டம் செருகூரை சேர்ந்த மாணிக்கவேல் மகன் செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்றும் அந்த படகில் 60 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் பின்னர் அவர்களை கடத்தி செல்லும் முயற்சியை கைவிட்டதும் தெரிய வந்தது.
இலங்கை அகதிகளை கடத்தி செல்ல முயன்றதாக மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமில் இருக்கும் உமா ரமணன் என்கிற ரமணன், விழுப்புரம் மாவட்டம் கீழ புதுப்பட்டு முகாமை சேர்ந்த பாபு, மற்றும் நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி முகாதை சேர்ந்த தயா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படகு உரிமையாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இவர்கள் நாகை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை புழல் சிறைக்கு கொண்டு செல்ல பொலிஸார் முடிவு செய்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 6ந் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச் செல்ல முயன்ற 120 பேரை கடற்படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களுக்கான ஒழுக்கக் கோவையை வாபஸ் பெற்று விட்டதாக வெளிவந்த செய்திகள் பொய்! கெஹலிய
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 07:46.19 AM GMT ]
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஊடகங்களுக்கான ஒழுக்கக் கோவையை ஏற்பதா இல்லையா என்பது ஊடகங்களைப் பொறுத்த விடயம் என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை அதன் மூலமான விளைவுகளுக்கு ஊடகவியலாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சரான கெகலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
ஊடகங்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட ஒழுக்கக் கோவையை, உரிய ஆதரவு இல்லாத காரணத்தால் அரசாங்கம் வாபஸ் பெற்று விட்டதாக வந்த சில செய்திகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல அவர்கள், அது ஒரு பொய் என்றும், இது குறித்த முடிவை எடுப்பதற்கான சுதந்திரத்தை ஜனாதிபதி ஊடகவியலாளர்களுக்கே விட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கான இந்த ஒழுக்கக் கோவை குறித்த விடயங்கள் தொடரும் என்றும், அவை குறித்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் சில தரப்பினர் எதிர்த்தால் அவர்களது கருத்தையும் அமைச்சு கவனத்தில் எடுக்கும் என்றும் இதற்கான இறுதி முடிவுகளை அமைச்சு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இப்படியான தொடர்புசாத ஒழுக்கக் கொவை ஒன்றைக் கொண்டு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூரிய போன்றோரே வலியுறுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் இது குறித்து கருத்து வெளியிட்ட கரு ஜயசூரிய அவர்கள், அரசாங்க ஊடகங்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றையே தாம் கேட்டதாகவும், தனியார் ஊடகங்களுக்கான ஒழுக்க கோவையை தாம் கோரவில்லை என்றும் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten