[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:12.23 AM GMT ]
எவரையும் விவாதம் செய்யுமாறு அழைக்கவில்லை, அட்டையொன்று உடம்பில் ஏற முயற்சிக்கின்றது.
கொள்ளைக் கூட்டமொன்றை சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த அட்டை தன்னை பெரிய ஆள் என காண்பிக்கும் நோக்கில் இவ்வாறு உடம்பில் ஏறுகின்றது.
எந்தக் காவலத்திலும் விவாதங்களுக்கு அழைக்கவில்லை.
அவ்வாறான தலை நோய் எதுவும் எனக்கு கிடையாது.
இவ்வாறான பல அட்டைகளை வீசி எறிந்ததுண்டு என அமைச்சர் ராஜித சேனாராட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளைக் கூட்டமொன்றைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு- போலி வீசா தயாரித்த இருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:19.29 AM GMT ]
அனுராதபுரத்திலிருந்து நொச்சியாகம பிரதேசத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று, முச்சக்கர வண்டி சாரதியை தாக்கி, 4000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இராணுவ உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.
இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று பேர் அடங்கிய கொள்ளைக் கூட்டமொன்று இவ்வாறு முச்சக்கர வண்டி சாரதியிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இராணுவ உத்தியோகத்தர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த படைவீரர் பியகம இராணுவ முகாமில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி வீசா தயாரித்த இருவர் கைது
போலியான முறையில் வீசா தயாரித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு போலி வீசாக்கள், அதனை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு போலி வீசாக்களும் கட்டாருக்கு செல்வதற்காக தயாரிக்கப்பட்டவை.
சந்தேக நபர்கள் இன்று புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten