தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

'இடதுசாரிகளின் தேவையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது!'' உ.வாசுகி சொல்கிறார்

13வது திருத்தப் பிரேரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமே தீர்வு!- ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 01:16.48 AM GMT ]
13வது சட்டத்திருத்தம் பற்றி இறுதி முடிவெடுக்கும் பாரிய பொறுப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதில் கலந்து கொண்டு பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு உதவ வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேண்டுகொள் விடுத்தார்.
பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பொறுப்பாசிரியர்களையும் அலரிமாளிகையில் சந்தித்த போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க,  சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, பசில் ராஜபக்ச, கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான மொஹான் சமரநாயக்க, ஊடக தகவல்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்திய அரசாங்கம் 13வது திருத்தப் பிரேரணை குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறார்கள் என்று ஜனாதிபதி யிடம் ஓர் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி; எங்களைப் பொறுத்தமட்டில் அவ்விதம் எத்தகைய கருத்துக்களையும் இந்தியா வெளியிடவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இலங்கை, இந்திய நட்புறவு சீர்குலைந்து விட்டதென்று கூறுகிறார்களே என்ற இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அதை யார் சீர்குலைத்ததென்று நாம் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஹாஸ்யமாக பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களைப் பார்த்து, வடமேல் மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்திருந்தால் இப்போது என்ன நடந்திருக்கும் என்று ஜனாதிபதி புன்முறுவல் பூத்தபடி கூறினார்.
நாம் வடமாகாண தேர்தலை மட்டும் நடத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. நாட்டின் தென்பகுதியிலும் இதுபோன்ற பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, நாம் வடபகுதிக்கு மாத்திரம் இந்தத் தேர்தலை நடத்தப் போகிறோம் என்று எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாம் இந்த மூன்று மாகாணங்களின் தேர்தலையும் நடத்தவுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கைக்கு எதிரான எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களின் போலிப் பிரசாரங்களை முறியடிப்பதற்கு சர்வதேச ரீதியில் நீங்கள் எதனை செய்ய உள்ளார்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், நாம் எமது வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்து வருகிறோம். ஆயினும் எங்கள் தரப்பிலும் சில குறைபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்றார்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கைக்கு வந்து 13வது திருத்தச் சட்டம் பற்றி அரசாங்கத் தலைவருடன் பேசப் போகிறாரே, அதைப்பற்றி தகவல்களை எடுத்துரையுங்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கேட்ட போது, வருடாந்தம் இதுபோன்ற கூட்டங்கள் ஒரு தடவை மாலைத்தீவு குடியரசிலும் இன்னுமொரு தடவை இந்தியாவிலும் அடுத்த தடவை இலங்கையிலும் அரச அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறும். சிவசங்கர் மேனன் அதுபோன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே இலங்கை வருகிறார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
13வது திருத்தச் சட்டமூலம் ஒரு வெள்ளை யானை என்று கூறுகிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கேட்ட போது, 13வது திருத்தச் சட்டம் ஒரு வெள்ளை யானையாக இருந்தால் கூட அதனை நாம் கொன்றுவிட முடியாது. அதனை வைத்து நாம் வேலை வாங்கப் பழகிக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி பதிலளித்தார்.
ஊடகங்களும் சிறு சிறு பிழைகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்தை அடித்து பலவீனப்படுத்தவே பார்க்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கருத்துக்களை முன்வைத்து சுமுகமான தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பொறுப்பு அரசாங்கக் கட்சிக்கு மட்டுமல்ல, சகல அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறதென்று கூறினார்.

'இடதுசாரிகளின் தேவையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது!'' உ.வாசுகி சொல்கிறார்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 01:44.49 AM GMT ] [ விகடன் ]
இலங்கைத் தொழிலாளர்களிடம் இனப் பகைமை உணர்வு தலை​தூக்கத் தொடங்கியதற்கான காரணங்​களாகக் குறிப்பிடுகிற விலைவாசி உயர்வு, ஆட்குறைப்பு, நாடெங்கும் பரவிய மலேரியா நோய் போன்றவற்றிற்கு சிங்களவர் - மற்றவர் என்ற வேறுபாடு உண்டா? என்பதைக் கட்டுரையாளர்தான் சொல்ல வேண்டும்.
இந்த மூன்றையும் ஆளும் வர்க்கம் தீர்க்கத் தவறிய​தையும், அதன் காரணமாக எழுந்த கோபத்தை இனச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திருப்பி விட்டதையும் பார்க்கத் தவறலாமா?
இனத்தால் மொழியால் தமிழர்களாகவும், மதத்தால் இந்து, முஸ்லிம்களாகவும் இருந்தவர்​களை இரு பிரிவாகப் பிரித்து மோதவிட்டது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் சூழ்ச்சி என்பதை அங்கீகரிக்கும் போது, தமிழர்-சிங்களவர் என்று பிரித்து மோதவிட்டது இலங்கை ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி என்பதை ஏன் அங்கீகரிக்க முடியாது?
இந்த அடிப்படை அரசியலைப் புரிந்து கொண்டு வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதன் மூலமும், மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும் இனப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.
ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை, இலங்கை தேசிய இனப் பிரச்சினையில் இடதுசாரிகள் எடுத்த சரியான நிலை குறித்து கட்டுரையாளர் நியாயமாகவே குறிப்பிடுகிறார்.
இலங்கையின் தொழிலாளி வர்க்கமாக விளங்கிய மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற முடிவை, அனைத்து சிலோன் தமிழர் காங்கிரஸும் இடம்பெற்றிருந்த அரசுதான் எடுத்தது. அதன் தலைவர் எஸ்.ஜி.பொன்னம்பலம் குடியுரிமை பறிக்கப்பட்டதை நியாயப்படுத்தி வாதாடினார்.
ஆனால் 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜ கட்சி என்கிற இடதுசாரிக் கட்சிதான், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் குரல் எழுப்பிய முதல் கட்சி. 1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்து வாக்​களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 பேர்.
இதில் 9 பேர் மட்டுமே தமிழர்கள். இதர 20 பேரும் இடதுசாரிகள் என்பதும் அவர்கள் சிங்களவர்கள் என்பதும் வரலாறு. இந்தச் சட்டத்தை எதிர்த்து மிக வலுவாக வாதாடிய சில்வா ஒரு சிங்களவர்தான். அவர் இடதுசாரி. இதுதான் இடதுசாரி அரசியல்.
ஜனதா விமுக்தி பெருமுனா (JVP) துவக்க காலத்தில் இடதுசாரி பார்வையுடன்தான் இருந்தது. மலையகத் தமிழர்கள் மத்தியில் இருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஆனால் கட்டுரையாளர் கூறியிருப்பதுபோல 70-களுக்குப் பின்னர் இடதுசாரிகளின் அரசியல் வெளி குறைந்தது. குறுகிய அரசியல் பார்வையில் இருந்து விலகி நின்று, இலங்கையின் இனப்பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்படுவதை இது மேலும் சிக்கலாக்கியது.
1976-ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தது. அதற்கு முந்தைய சில ஆண்டுகளாகவே இரு தரப்பிலும் இனப்பகைமை திட்டமிட்டு ஊட்டப்பட்டது. இருப்பினும், இடதுசாரிகள் முடிந்தவரை இரு தரப்புத் தொழிலாளிகளையும் ஒன்றுபடுத்தி வைத்திருந்தனர்.
இனவெறிக் குரல்கள் வலுப்பெற, வலுப்பெற, தொழிலாளி வர்க்க அரசியலும் இடதுசாரி அரசியலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதன் பின்னணியைப் புரிந்துகொண்டு ஆளும் வர்க்கத்தின் அரசியலுக்கு எதிராக வலுவாகப் போராட வேண்டிய இடதுசாரிகள், காலப் போக்கில் அந்த அரசியல் கடமையில் பலவீனப்பட்டனர்.
சிங்களப் பகுதியில் இருந்த இடதுசாரி அமைப்புகள் சிலவற்றின் நிலைப்பாடுகள் நீர்த்துப்போயின. சில, இலங்கை அரசால் மௌனிக்கப்பட்டன. தமிழ் பகுதியில் இருந்த இடதுசாரிகள் அமைப்புகள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டனர்.
இவ்வாறு இடதுசாரிகள் தங்கள் வர்க்க நிலைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், இடதுசாரி அரசியலின் தேவையையே குறைத்து மதிப்பிடுவது பிரச்னை​யைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.
இலங்கை அரசியலில் ஜனநாயக சக்திகளின் ஐக்கியம் 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பட்டுப்போய் விட்டது என்று கூறப்படுகிறது.
வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு இத்தகைய நிலை ஏற்படுவதாலேயே எப்போதுமே அவை மீள முடியாது என்று இரங்கற்பா பாடுவது, வரலாற்றோடு பொருந்திப் போகவில்லை.
உதாரணமாக முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியில் தலை​தூக்கிய பாசிசம், எந்த ஜனநாயக இயக்கத்தையும் அனுமதிக்கவில்லை. அடக்கி ஒடுக்கியது.
ஆனால், இறுதியில் பாசிசம்தான் பட்டுப்போனது. ஜனநாயக இயக்கம் மீண்டும் மலர்ந்தது. இன்றைய இலங்கையில் இடதுசாரி இயக்கம் பலவீனப்பட்டிருக்கிறது.
இடதுசாரிகள் சிலர் 1970-களுக்குப் பின்னர் இனவெறி சாய்மானத்துக்கு ஆளானார்கள் என்பது விமர்சனத்துக்குரியது.
ஆனால் இந்த நிலை, இடதுசாரி இயக்கத்தைப் பலப்படுத்துவதற்கும், வர்க்க அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வைப்பதற்குமான நியாயத்தை வலியுறுத்துகிறதே தவிர இடதுசாரி இயக்கத்தைப் புறக்கணிப்பதை அல்ல.
தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் ஒடுக்கப்படும் இதர பகுதி மக்கள் ஒன்றிணையும் போது, அனைத்து இனங்களுக்குமான சம உரிமையைத் தீர்மானமாக நிலைநாட்ட முடியும்.

Geen opmerkingen:

Een reactie posten