தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

கனடியத் தமிழர்களின் நீதிக்கான நடைபயணம்

வடக்கில் படையினர் இராணுவ முகாம்களுக்கு வரையறுக்கப்பட மாட்டார்கள்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 02:31.15 AM GMT ]
வடக்கில் படையினர் இராணுவ முகாம்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை முகாம்களுக்கு வரையறுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய இந்திய விஜயத்தின் போது இது வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
இலங்கை- இந்திய உடன்படிக்கை 2.9 சரத்தின் அடிப்படையில் படையினரை வடக்கில் இராணுவ முகாம்களுக்கு வரையறுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டுச் சக்திகளுடன் எந்தவொரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்வதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
கனடியத் தமிழர்களின் நீதிக்கான நடைபயணம்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 03:19.59 AM GMT ]
இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனிதவுரிமை மீறல்களையும், இனவழிப்பையும், லண்டனில் தமிழ் மக்களால் ஜனநாயக முறைப்படி நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் இலங்கை அரசால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதைக் கண்டித்தும் நீதிக்கான நடைபயணமொன்றை கனடியத் தமிழர் தேசிய அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆழக்குழி தோண்டிப் புதைத்தாலும் நீதி என்றோ பூமியைக் கிழித்து வெளியே வந்து உண்மையை வெல்ல வைத்தே தீரும்!
நன்மைகள் வாழவும் தீமைகள் அழியவும் நீதியை நிலைநாட்டி வாழவைப்போம். உண்மைகளை ஊனமாக்கத் துடிக்கும் இலங்கை அரசை புறக்கணிக்குமாறும் மனிதவுரிமைகளைக் காக்க மாந்த நேயத்துடன் ஒருமித்த குரலாய்க் குரல் கொடுக்கவும் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றிணையுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் உற்பத்திகளைப் புறக்கணிப்பதிலும் இலங்கை அரசைத் தனிமைப் படுத்துவதிலும் ஏற்படும் வெற்றிகள் நாளை நமது விடிவிற்கான பாதையினைத் திறப்பதற்கு வழிவகுக்கும்.
எம்மினத்திற்கு எதிராக தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இலங்கை அரசைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கு இப்படியான எம் தொடர் முயற்சிகள் மட்டுமே பயன்கொடுக்கும்.
இன்று 2 மணியளவில் குயின்ஸ் பார்க்கில் ஆரம்பமாகவுள்ள நடை பயணத்தில் அனைவரும் பங்கெடுத்து பல்லின மக்களின் ஆதரவைத் திரட்டி எம்மினத்திற்கான நீதியை நாமே வென்றெடுப்போம் என கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten