13வது திருத்தம்! சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டோரின் முயற்சிகள் எதுவும் பலனளிக்காது!
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 12:12.44 AM GMT ]
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஆளும் கட்சியில் பெரும்பாலானோர்கள் இல்லை. ஒரு சில இனவாத தரப்புகளே தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்க கூடாது என்று போராடுகின்றன.
ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை, நீதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை கூடுதல் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
வட மாகாண சபை தேர்தலில் மாத்திரம் அதிகாரக் குறைப்பிற்கு முயற்சித்து இன்று இனவாத கட்சிகள் சிங்கள மக்களிடையேயும் அவமானப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில்,
வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் வெளிவந்த நாள் முதல் 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உட்பட பேரினவாத அமைப்புகள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தன. இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும்.
ஏனெனில் கடந்த 25 வருட காலமாக நாட்டில் 13வது திருத்தச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அதேபோன்று மாகாண சபைகளும் முறையாக செயல்படுகின்றன.
யுத்தம் முடிவடைந்தும் கிழக்கு உட்பட பல மாகாண சபைகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அதன் போது 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்காமல் வட மாகாண சபையை மாத்திரம் குறிவைத்து அதிகாரங்களை குறைக்க முற்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இது உள் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் விடயங்களாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தெளிவாக கூறியுள்ளோம். எமது கருத்துக்களுக்கு அவர் மரியாதையளித்துள்ளார்.
13வது திருத்தத்தை ரத்துச் செய்ய அமைச்சர்களான சம்பிக்க ரணவக மற்றும் விமல் வீரவன்ச உட்பட சில அமைச்சர்கள் யோசனைகளை முன்வைக்கையில் அதற்கு எதிராக நாங்கள் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தோம்.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13வது திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களை செயலிழக்க செய்ய இடமளிக்கப் போவதில்லை என்றார்.
மனிதஉரிமை, நீதி விவகாரங்களில் முன்னேற்றம் உள்ளது என்பதை இலங்கை நிரூபிக்க வேண்டும்!- பிரித்தானியா
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 12:00.10 AM GMT ]
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை இலங்கை அரசாங்கம் நிரூபிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவின் கமரூன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மீது பிரித்தானியா கொண்டுள்ள மரியாதையின் காரணமாக அமர்வுகளில் பங்கேற்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமர்வுகளை ஏற்பாடு செய்யும் நாடு என்ற ரீதியில் இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை மதித்து செயற்பட வேண்டுமென ஏற்கனவே வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் அறிவித்துள்ளார் என ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten