[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 07:00.34 AM GMT ]
உடுதும்பறை பூர்வாராம விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் இன்று நிலவும் அரசியல் செயற்பாடுகள் சம்பந்தமாக யாரும் திருப்தி அடைய முடியாது. இன்றைய அரசியலில் கற்றோர், அறிவாளிகள் என சில பிரமுகர்களே உள்ளனர்.
நேர்மையாக நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு நாட்டில் இடமில்லாது போயிருப்பதே இந்த நிலைமைக்குக் காரணமாகியுள்ளது.
இத்தகைய சான்றோர்கள் அரசியலுக்கு வருவதில்லை. முன்வந்தாலும் கூட அவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படுவதில்லை.
மாறாக வழங்கப்பட்டாலும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. ஏமாற்றுக்காரர்களையும், தில்லுமுல்லுகள் புரிவோரையுமே அரசியலுக்கு எப்போதும் தெரிவு செய்து கொள்கின்றனர். முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கும் இடமளிப்பதா? என்ற கேள்விக்கான விடை பொதுமக்களிடமே உள்ளது.
இந்தநிலைப்பாட்டுக்கு முக்கியமான காரணியாகியிருப்பது விருப்பு வாக்கு முறைமையாகும். இந்த முறைமையை நாம் அனைவரும் கடுமையாக நிராகரிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவாக்கு மாத்திரமே இருக்க வேண்டியுள்ளது.
எதற்காக மூன்று விருப்பு வாக்குகள்? இவ்விதம் மூவருக்கு விருப்பு வாக்குகள் கிடைப்பதால்தான் ஏமாற்றுக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். அதனால் தான் மக்களுக்குப் பயனற்ற நபர்கள் அரசியலுக்கு வருகின்றனர் என்றார்.
மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்கவே விசாரணைக்கு ஆணைக்குழு நியமிப்பு: டெலிகிராப்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 03:32.13 AM GMT ]
மாத்தளை மனிதப் புதைகுழி விடயம் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் இருந்து ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு டெலிகிராப் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி உறுப்பினர்கள் என்ற நம்பப்படுவோர் கொலை செய்யப்பட்ட மாத்தளை வைத்தியசாலை வளவில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இடத்தை கட்டிட அமைப்புக்களுக்காக தோண்டிய போதே இந்த விடயம் வெளியானது.
இந்தநிலையில் குறித்த கொலைகளுடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் பிரதிவதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அதேநேரம் மாத்தளை நீதிவான் சத்துராணி டி சில்வாவும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவத் தரப்பினரின் வாக்குமூலங்களை பெறுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, மாத்தளை நீதிவான் உடனடியாக கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் குறித்த விசாரணையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் இதுவரைக்காலமும் குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்கவே உதவியுள்ளன.
எனவே இந்த ஆணைக்குழுவும் அந்த அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை கொழும்பு டெலிகிராப் வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten