[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 08:23.01 AM GMT ]
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது என்றும், அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது.
வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் மீண்டும் போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
வரும் 25ம் தேதி வைகோ தலைமையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. போராட்டம் எதிரொலியாக தற்போது இராணுவ முகாமை சுற்றிலும் உள்ளூர் போலீசார் இராணுவ வீரர்களுடன் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 18 நாட்களாக இராணுவ முகாம் எல்லைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறிவிக்கப்படாத ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 நாட்களாக நடக்கும் இந்த போராட்டம் குறித்து பிரதமருக்கும், இராணுவ அமைச்சகத்துக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் இலங்கை அதிகாரிகளை பெங்களூருக்கு மாற்றி பயிற்சி அளிக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 08:30.53 AM GMT ]
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் எஞ்சிய தரப்பினர் வெளிநாடுகளில் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களால் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் செயற்பாடுகளாலேயே தற்போது அவுஸ்திரேலியா சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
எனவே இந்தசிக்கலில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், அவுஸ்திரேலியா விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ள போதும், அவுஸ்திரேலியா இன்னும் அதனை தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten