தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 juni 2013

நாட்டில் கடும்போக்குவாதிகளுக்கு ஆதரவில்லை!- ஜனாதிபதி மகிந்த


இலங்கையில் ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:54.44 AM GMT ]
 இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
 மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹனவும் இணைந்து இந்த ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்துள்ளனர்.
200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் அனுசரணையாளர்களின் உதவியுடன் விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கடும்போக்குவாதிகளுக்கு ஆதரவில்லை!- ஜனாதிபதி மகிந்த
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:52.10 AM GMT ]
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடும்போக்கு வாதம் கடைப்பிடிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாகொல்லகம பகுதியில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொது பல சேனா அமைப்பை அரசாங்கம் ஆதரிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் கடும்போக்கு வாதிகள் யாரையும் அரசாங்கம் ஆதரிப்பதில்லை.
பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் கடும்போக்குவாதிகள் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 2ம் திகதி விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் 31 பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்டிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான அசம்பாவிதங்கள் இனி நாட்டில் நடைபெறாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten