[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 03:11.34 AM GMT ]
தம்பிலுவில் கலைமகள் பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக குடியிருப்பாளர் இல்லாத வீடு ஒன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் திருக்கோவில் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
குறித்த ஆயுதங்களை வீட்டின் காணியினுள் நீர்க்குழாய் ஒன்றினை பொருத்துவதற்காக கிடங்கினை வெட்டிய போது சந்தேகத்துக்குகிடமான முறையில் உரப்பொதி ஒன்று காணப்பட்டதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அங்கு சென்ற பொலிஸார் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்களை மீட்டதாக திருக்கோவில் பிரதி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் டி56 ரக துப்பாக்கி இரண்டு, கிரனேட் லோஞ்சர் ஒன்று, துப்பாக்கி ரவைகள் அறுபது மற்றும் துப்பாக்கி ரவைக் கூடுகள் இரண்டு என்பன அடங்குகின்றன.
உயர்கல்வி அமைச்சர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சித்திரவதைக் கூடமாக மாற்றியுள்ளார்!- ஜேவிபி (செய்தித் துளிகள்-3)
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 03:02.03 AM GMT ]
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சித்திரதவதைக் கூடமாக மாற்றியுள்ளதாக ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக்கழகங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார்.
பல்கலைக்கழக மாணவர்களின் சாதாரண போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்விக்காக ஒதுக்கப்படும் பணம் குறைக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடும்போக்குடைய செயற்பாடுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- எஸ்.பி.
கடும்போக்குடைய செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஒழுக்க விதிகளுக்கு புறம்பாக செயற்படும் மாணவ மாணவியர் தண்டிக்கப்பட வேண்டும்.
குழப்பங்களை விளைவித்த மாணவ மாணவியரின் வகுப்புக்களை தடைசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
அரசியல் ரீதியாக அநாதரவான கட்சிகள் மெதுவாக பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்துள்ளன.
சில பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாது குழப்பங்களை விளைவித்து வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம்- ஜேவிபி
கல்வி அமைச்சு பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்துவதையே மனதிற் கொண்டு செயற்படுவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளுள் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 1000 பேர் வகுப்புத்தடை செய்யப்பட்டுள்ளனர்.
5 பீடங்களைக் கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு 2013ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் அனுமதியின்போது 500 பேர் குறைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த முறை அனுமதிக்கட்டணம் 3000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து தீர்வை தர அரசாங்கத்தால் முடியவில்லை என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த வகுப்புத்தடைக்கு நியாயம் கோரியே மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆனால் காவல்துறையினரை தாக்கும் அரசியல்வாதிகளை கைது செய்வதற்கு எவரும் முனைவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
காவல்துறையினர் அரசியல்வாதிகளுக்கு பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten