தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 juni 2013

அரசியல் அமைப்பு திருத்தங்களை இலங்கை ஒத்திவைக்கலாம்?

கிழக்கிலும் கால் பதிக்கும் சீனா - பாரிய முதலீட்டுத் திட்டங்களில் ஆர்வம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 09:56.42 AM GMT ]
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பாரிய தொழில்திட்டங்களில் பெருந்தொகை முதலீட்டை மேற்கொள்ள சீனா ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது இலங்கை முதலீட்டுச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் பொருத்தும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, உருக்குத் தொழிற்சாலை போன்ற தொழில்முயற்சிகளில் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் இதில் உள்ளடங்கியுள்ளனன.
இவற்றோடு இணைந்ததாக கிழக்கு மாகாணத்தில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு அழகுசாதன பொருட்களை தயாரிக்கும் முன்வரைவு ஒன்றும் இலங்கை முதலீட்டுச் சபையிடம் சமர்ப்பிக்கட்டுள்ளது.
இவற்றுக்கென 25 மில்லியன் தொடக்கம், 50 மில்லியன் டொலர் வரையிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீனாவைச் சேர்ந்த பத்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதற்கு மேலதிகமாக கனரக தொழிற்சாலைகளைக் கொண்ட சிறப்பு பொருளதார வலயம் ஒன்றை சம்பூரில் உருவாக்குவது தொடர்பான முன்மொழிவு ஒன்றை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

அரசியல் அமைப்பு திருத்தங்களை இலங்கை ஒத்திவைக்கலாம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 10:07.36 AM GMT ]
இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம் அரசியல் அமைப்பில் கொண்டு வரவிருந்த திருத்தங்களை ஒத்திவைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியா அரசாங்கத்தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நடத்திய பேச்சுக்களின் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அரசியல் அமைப்பு திருத்தங்களை இந்த வாரத்தில் மேற்கொள்ளவுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதிலளித்த சில்வா இல்லை என்று உடனடியாகவே பதிலளித்தார்.
13வது அரசியல் அமைப்பு உட்பட்ட திருத்தங்களில் மாற்றங்களை இலங்கை அரசாங்கம் கொண்டுவருமானால் எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா பகிஸ்கரிக்கக்கூடும் என்ற அச்சத்திலேயே இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten