தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

விடுதலைப் புலி உறுப்பினர் தப்பிச் செல்ல உதவிய, சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து விசாரணை


மறைந்த ஜயலத் ஜயவர்தன எம்.பி.யின் இறுதிக் கிரியைகள் இன்று
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 04:12.45 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஜா-எல, வெலிகம்பிட்டிய றோமன் கத்தோலிக்க மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ஜயலத் ஜயவர்தன 1994ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்.
2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இவர் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக பணிபுரிந்தார்.
அண்மையில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கடந்த வியாழக்கிழமை காலமானார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்னாரின் சடலம் வைக்கப்பட்டுள்ள அவரது வெலிகம்பிட்டிய இல்லத்துக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் புலி உறுப்பினர் தப்பிச் செல்ல உதவிய, சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 04:56.16 AM GMT ]
மாத்தறை வெசாக் வலயத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் விடுதலைப்புலி உறுப்பினரை தப்பிச் செல்ல உதவிய இரண்டு சிறைச்சாலை அதிகாரிக் குறித்து சிறைச்சாலை மற்றும் காவற்துறை ஆகியவற்றை சேர்ந்த இரண்டு குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
மாத்தறை வெசாக் வலயத்திலிருந்து விடுதலைப் புலி உறுப்பினர் தப்பிச் செல்ல உதவிய சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலை மற்றும் காவற்துறை ஆகியவற்றை சேர்ந்த இரண்டு குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
இந்த இரண்டு அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு, குறித்த சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 
மேற்படி அதிகாரிகள் பற்றி பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு அறிவிக்க உள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற புலிகளின் உறுப்பினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் நீண்டகாலம் மேற்கொண்ட திட்டத்தின் அடிப்படையில் குறித்த புலிகளின் உறுப்பினர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

Geen opmerkingen:

Een reactie posten