[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:22.59 AM GMT ]
வீட்டுக் காவலில் இருப்பதனைப் போன்று உணர்வதாக முன்னாள் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் பிரிவினர் அடிக்கடி விசாரணை நடத்துகின்றனர், அடிக்கடி தகவல்களை திரட்டுகின்றனர். இதனால் இயல்பு வாழ்க்கையை தொடர்வதில் சிக்கல் காணப்படுகின்றது.
எனக்கும். எனது கணவருக்கும், மகனுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் அவுஸ்திரேலியா கடற்படைக்குச் சொந்தமான கப்பல்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:39.50 AM GMT ]
அவுஸ்திரேலியா கடற்படைக்குச் சொந்தமான 'ஹமஸ்ட் டூவும்பா' (HMAS Toowoomba) எனும் கப்பல் நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
118 மீற்றர் நீளமும் 3600 டொன் நிறையும் கொண்ட குறித்த கப்பலில் 192 கடற்படையினர் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருதந்துள்ள கப்பல் எதிர்வரும் நான்காம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten