மட்டக்களப்பு செல்லக் கதிர்காம ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து கொள்ளை- மேலும் இரு கோயில்களில் திருட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 05:03.08 AM GMT ]
நேற்றிரவு 10 மணியளவில் கோயிலின் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆலய பூசகர் தெரிவித்தார்.
பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஆலயத்திலிருந்து பெரும்பாலான விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 19 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்செல்வராசா, பி.அரியநேத்திரன், சி.யோகேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க கோயிலுக்குச் சென்று இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பில் மேலும் உரு கோயில்களில் திருட்டுச் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு இந்துக் கோயில்களில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் மூல விக்கிரகம் மற்றும் நவக்கிரகங்கள் என்பன உடைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை, கிரான்குளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்திலும் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பிரித்தானியாவிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படுவது குறித்து ஐ.நா கவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 05:17.26 AM GMT ]
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டி கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடுத்தப்படுகின்றார்களா? அவ்வாறு நாடு கடத்தப்படுவதன் மூலம் உள்நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்களா என்பது குறித்து பிரித்தானிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு, பிரித்தானிய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதன் மூலம் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பிரடகனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten