[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 05:44.48 AM GMT ]
களு கங்கையின் ஊடாக மறு கரைக்கு செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
தமிழர்களாலும், எமது ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியாலும் என்றும் விரும்பப்பட்டவரும், போற்றப்பட்டவர் அமரர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன என கட்சியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
தந்தை, மகள் மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
2ம் இணைப்பு
மூவரில் இருவர் சடலங்களாக மீட்பு: ஒருவரை காணவில்லை!
இரத்தினபுரி, களு கங்கையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமற்போயிருந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய மூவரில் தந்தை மற்றும் மகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீபிட்டிய பிரதேச மரண வீடொன்றில் கலந்து கொள்வதற்காக படகில் சென்றவேளை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது இப்படகில் பயணித்த 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணாமற்போயுள்ள மற்றைய நபரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேசாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழர்களால் என்றும் விரும்பப்பட்ட மாமனிதர் அமரர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன! சி. பாஸ்க்கரா
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 05:58.55 AM GMT ]
தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழர்களின் அழிவு பாதை தொடங்கிய காலம் முதல் இறக்கும் வரை எவ்வித மாற்றமும் இன்றி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களுக்காக சளைக்காது குரல் கொடுத்து தமிழர் பிரச்சினையை உலகறியச் செய்ததில் காத்திரமான தனக்கென ஓர் இடத்தை பெற்ற பெருந்தகை.
அது மட்டுமன்றி தமிழர் துன்புறும் வேளை அவ்விடம் சென்று ஆறுதல் கூறி உதவி செய்த மனிதரான அமரர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன இவ் மாமனிதர் மறைந்தாலும் தமிழர் உள்ள வரை தமிழர்கள் இதயங்களில் இவர் மறக்கப்படமாட்டார்.
அதேவேளை எமது கட்சியுடன் மிகவும் அன்னியொன்னியமாகவும் ஒற்றுமையாகவும் அரசியல் பயணத்தை மேற்கொண்டவர் எமது தலைவரை 2007ம் ஆண்டு புலனாய்வுத்துறை விசாரித்த போது அமரர் பத்து மணிநேரம் தனித்து காத்திருந்து எமது தலைவர் மனோ கணேசனை விடாமல் இவ்விடத்தில் இருந்து அகலேன் என்று இருந்து தனது விசுவாசத்தை அன்றிலிருந்து இன்று வரை காட்டியதை என்றும் எமது கட்சி மறக்காது.
தற்போது கூட தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான கெடுபிடிகளுக்கும் அதில் இருந்து மீள துணை நின்ற பெருந்தகை அமரர் ஜெயலத் ஜெயவர்த்தனா தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என சாதி மத பேதமற்று நேசிக்கப்பட்ட அன்னாருக்கு எனது தலைவர் மனோ கணேசன் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் சார்பாக தலைசாய்த்து அஞ்சலி தெரிவிப்பதுடன் அன்னாரின் குடும்பத்தார்க்கும் அவரின் ஐக்கிய தேசிய கட்சியார்க்கும் எமது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Geen opmerkingen:
Een reactie posten