தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 juni 2013

யாழ். வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு

வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:22.16 AM GMT ]
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் முஹமட் சியாம் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தனவை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் வாஸ் குணவர்தன இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சஹாப்டீனின் உத்தரவிற்கு அமைய வாஸ் குணவர்தன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கான விளக்கமறியலை கொழும்பு நிதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
இதன்படி இவர் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வர்த்தகர் தொம்பே பிரதேசத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

யாழ். வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:29.15 AM GMT ]
யாழ்ப்பாண வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவம் குறித்து வர்த்தகர்கள் முறைப்பாடு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம், குறித்த சம்பவம் குறித்துப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் கப்பம் கோரும் சம்பவம் குறித்து கடந்த இரு வாரங்களாக வர்த்தகர்கள் வணிகர் கழகத்திற்கு முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
அதில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், வங்கிக் கணக்கு இலக்கத்தைக் கொடுத்து அந்த இலக்கத்திற்கு பணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
எனினும் எவ்வளவு பணம் கேட்டார்கள்? அவர்கள் செலுத்தச் சொன்ன வங்கிக் கணக்கிலக்கம் என்ன? என்பது குறித்தெல்லாம் எமக்குத் தெரியாது.
இந்நிலையில் விடயம் தொடர்பில் யாழ்.பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன், வர்த்தகர்கள் மூலம் பொலிஸில் முறைப்பாடும் கொடுத்துள்ளோம். இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் வர்த்தகர்களிடம் வாக்கு மூலங்களையும் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் வணிகர் கழகம் அவதானிப்புடன் உள்ளது. இதேபோன்று வேறு வர்த்தகர்களிடமும் கப்பம் கோரப்பட்டால், வெளிப்படையாக பொலிஸாரின் கவனத்திற்கும், வணிகர் கழகத்தின் கவனத்திற்கும் கொண்டுவரவேண்டும் என நாம் கேட்டுள்ளோம் என்றார்.
2ம் இணைப்பு
யாழில் வர்த்தகர்களை தொலைபேசியில் மிரட்டிக் கப்பம் பெறுபவர்கள் அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர்கள்!- யாழ்.பொலிஸார்
யாழ்.மாவட்டத்தில் வர்த்தகர்களை தொலைபேசியில் மிரட்டி கப்பம் பெறுபவர்கள் தொடர்பில் யாழ்.வர்த்தக சமூகத்தினர் விழிப்பாக இருக்குமாறு யாழ்.பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
யாழில் வர்த்தக நிலையங்களை நடத்துபவர்களை தொலைபேசியில் மிரட்டி கப்பம் பெறும் செயற்பாடுகள் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு முறைப்பாடுகள் பல கிடைத்துள்ளன.
எனவே இந்த செயற்பாடுகளுக்கு வர்த்தகர்கள் இரையாகக் கூடாது, உடனடியாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் அவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறும் அவர் கேட்டுள்ளார்.
மீண்டும் யுத்ததிற்கு முந்தைய சூழலை ஏற்படுத்துவதற்கு சிலர் முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கேட்பவர் ஒருவர் தொடர்பில் விசேட புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.
விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் அரசியல் பின்னணியைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக யாழ்.பொலிஸ் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்துள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten