[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 04:51.35 PM GMT ]
முல்லைத்தீவு –முள்ளியவளை வித்தியானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் வாகனத்தால் மோதி ஒருவரை கொன்று, மற்றொருவரை படுகாயப்படுத்திய வெளிநாட்டு நபர் ஒருவரை படையினரும், பொலிஸாரும் காப்பாற்ற முயல்வதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்றிரவு 8மணியளவில் ஹயஸ் வாகனத்தில் அதிக மது போதையில் வந்த வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இருவரை மோதியுள்ளார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டப் பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஒருவர் வாகனத்தின் முன்பக்க பாதுகாப்பு பகுதியில் சிக்குண்டு சுமார் 500 மீற்றர் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் விபத்தின்போது தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வாகனத்தின் சாரதியான வெளிநாட்டவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை சட்டத்திலிருந்து காப்பாற்ற அவரது உறவினர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு பொலிஸாரும் படையினரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு உடந்தையாக செயற்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
திருமுறிகண்டியில் “போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 05:08.48 PM GMT ]
யுத்தத்தின் பின்னர் திருமுறிகண்டி, சாந்தபுரம், போன்ற கிராமங்களை ஆக்கிரமித்திருந்த படையினர் இரணைமடு குளத்தினை அடிப்படையாகக் கொண்டு குறித்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றத்தை உருவாக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த முயற்சிகள் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களால் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏ-9 வீதிக்கு இடது புறமுள்ள அம்பகாமம் பிரதேசத்திற்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்காக சுமார் ஆயிரம் வீடுகள் சீனா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இவ்விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கோ, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கோ எவ்விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் 2012ம் ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த பகுதியிலுள்ள வனவளத்துறைக்குச் சொந்தமான நிலத்தை தமக்கு வழங்குமாறு இராணுவம் கேட்டிருந்தது.
அதற்குச் சட்டரீதியான அனுமதி எதுவும் வழங்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுமுள்ளது.
மேலும் இந்தப் பகுதிக்குள் அனுமதியில்லாமல் யாரும் நுழைய கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனோடு காப்பெற் வீதிகளும் இப்பகுதியில் துரிதமாக அமைக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten