[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 04:46.02 AM GMT ]
சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை விசா பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
வீசா இல்லாது அந்நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தொடர்ந்து 13,000 இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் சவுதியிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகளின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
சவுதி அரேபியாவில் ஆறு லட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர் கைது: ஜேர்மனி கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 05:13.12 AM GMT ]
இலங்கையில் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தலைவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
பிரிட்டிரிச் ஏபர்ட் அமைப்பின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நோரா லங்கன்பார்சரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கடந்த 13ம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெர்மனியின் பேர்ளின் நகரில், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெல்லை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதே தினத்தில் நோராவை இலங்கை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது பணிகளை தடையின்றி மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது பணிகளை தடையின்றி மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கைதினைத் தொடர்ந்து குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பிலேயே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பிலேயே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி 200 மில்லியன் சொத்துக்களைப் பிணையாக வைத்து அண்மையில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten