[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 02:44.51 AM GMT ]
தமிழ்நாட்டில் உள்ள குன்னூர், வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் இரண்டு படை அதிகாரிகளையும் திருப்பி அழைக்க பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிங்டன் பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உட்பட பல தமிழின ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கை படை அதிகாரிகள் இருவரையும் தமிழ்நாட்டில் இருந்து வேறு பயிற்சி நிலையங்களுக்கு மாற்றுவது குறித்து ஆராயப்பட்டது. ஆனால் அதற்கு இலங்கை உடன்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில், இலங்கைப் படை அதிகாரிகள் வெலிங்டனில் ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
இந்திய அரசாங்கம் இதைவிட தரமான, பாதுகாப்பு முகாமைத்துவக் கல்லூரியில், உயர் பாதுகாப்பு முகாமைத்துவப் பயிற்சிநெறியை பின்தொடரும் வாய்ப்பை வழங்க முன்வந்த போதிலும், அது கேணல் தரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கே பொருத்தமானது.
தற்போது வெலிங்டனில் பயிற்சி பெறும் அதிகாரிகள் விங்கொமாண்டர் மற்றும் கேணல் தரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு அது பொருத்தமானது அல்ல. இதனால் பாதுகாப்புச் செயலார் கோத்தபாய இரு படை அதிகாரிகளையும் தமிழ்நாட்டில் இருந்து திருப்பி அழைக்க முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இவர்களை வேறெங்காவது இதே பயிற்சியை பெறுவதற்கு அனுப்பவும் அவர் முடிவு செய்துள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தகாலங்களில் தமிழ்நாட்டில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி இடம்பெற்றபோது, பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது, பெங்களூருக்கும், டேராடூனுக்கும் இலங்கை அதிகாரிகள் இடம்மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினை பகிஷ்கரிக்கத் தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 03:10.09 AM GMT ]
இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினை பகிஷ்கரிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அங்கம் வகிக்கப் போவதில்லை.
எனவே, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் பயனில்லை என இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளது.
இடதுசாரி கட்சிகள் இன்றைய தினம் விசேட கூட்டமொன்றை நடாத்தவுள்ளன.
அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார மற்றும் டியூகுணசேகர உள்ளிட்ட தலைவர்கள் இன்றைய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உள்ளனர்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட உள்ள இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட மாட்டாது என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten